தோழர் நடராசன் பாலசுப்ரமணியம் அவர்களது உதவியால் அஞ்சலி நாளை முதல் ஷிவானி பொறியியல் கல்லூரிக்கு போகிறாள். நாளை அவரோடு பேசி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வாள்.
நேற்று இன்னொரு குழந்தையான யோகேஸ்வரியின் படிப்புக்காக யாரேனும் 6000 ரூபாய் உதவ முடியுமா என்று கேட்டிருந்தேன். இனிய தோழர் அன்பாதவன் (Anbaadhavan Shivam Bob) உடனே கமெண்ட்டில் எனது வங்கிக் கணக்கு விவரம் கேட்டிருந்தார். நான் அதை செய்வதற்குள் தோழர் Jafar Ali என் கணக்கில் தொகையை சேர்த்துவிட்டார். இந்தத் தகவலை அன்பாதவனிடம் சொன்னபோது வாய்ப்பு நழுவியமைக்காக மிகவும் வருந்தினார்.
தோழர் நடராசன் அவர்களும் இதை தாமேதந்திருக்கக் கூடும் என்றார்.
இன்று யோகேஸ்வரி பள்ளி வந்து தொகையைப் பெற்க்று கொண்டாள். ஜாஃபர் தோழர் எண் கொடுத்து பேசச் சொல்ல இயலவில்லை. மருத்துவ மனையில் அறுவை முடிந்து தொடர் சிகிச்சையில் இருக்கும் அவளது தந்தையைக் காண அவசரமாகக் கிளம்பி விட்டாள். நாளை அதை செய்ய வேண்டும்.
தோழர்கள் அன்பாதவனும் நடராசனும் வருத்தப் படத் தேவை இல்லை.
யாரேனும் கட்டணாம் கட்ட இயலாமாத ஒரே காரணத்திற்காக எம் குழந்தைகள் யாரும் கூலி வேலைக்கு போகிறார்களா என்று தேட ஆரம்பித்து விட்டோம் .
இந்த உதவிகள் கிடைத்திருக்காத பட்சத்தில் அஞ்சலியும் யோகேஸ்வரியும்கூட கூலி வேலைக்குத்தான் போயிருப்பார்கள்.
தகுதியான பிள்ளைகள் கிடைத்து கல்லூரிகளிலோ அல்லது பாலிடெக்னிக் மற்றும் ஐ டி ஐ களிலோ இடமும் இருப்பின் தோழர்கள் அன்பாதவனையும் நடராசனையும் அணுகுவோம்.
பத்தாத பட்சத்தில் விரித்தும் கை ஏந்தவே செய்வோம்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்