Tuesday, July 12, 2016

65/66, காக்கைச் சிறகினிலே ஜூலை 16

இந்த ஆண்டு பீஹாரில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தங்கள் மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த மாணவியை மிகுந்தஉற்சாகத்தோடு நேர்காணத் தொடங்கியது அந்த உள்ளூர் தொலைக்காட்சி. 500 மதிப்பெண்ணிற்கு 444 மதிப்பெண் பெற்றிருந்தாள் ரூபி ராய் அந்தப்பிள்ளை.

அவளது சிறுவயது அனுபவங்கள் குறித்துகுடும்பம் குறித்துஎதிர்காலத் திட்டம் குறித்து என்று நகர்ந்து கொண்டிருக்கிறது நேர்காணல்எல்லாம்நல்லபடியாகத்தான் நகர்ந்து கொண்டிருந்து. ”அரசியல் அறிவியல்” பாடத்தில் அவளது மதிப்பெண் பிரகாசமாக ஜொலிக்கவே தனது கவனத்தை அங்குதிருப்பினார் நேர்கண்டவர். ‘புரோடிகல் சயின்ஸ்’ என்று ரூபி முதல் முறை உச்சரித்தபோது ஏதோ பிழையாக உச்சரித்து விட்டதாகவே நினைக்கிறார்.ஆனால் மீண்டும் மீண்டும் ‘பொலிடிகல் சயின்ஸ்’ என்பதை ‘புரோடிகல் சயின்ஸ் என்றே ரூபி உச்சரித்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்தாலும் ’சரி,அப்படித்தான் உச்சரிப்பாள் போல’ என்று கடந்து போகிறார்.

இன்னும் கொஞ்சம் நீண்ட நேர்காணலின் ஒரு இடத்தில் ‘அரசியல் அறிவியல்’ என்பது சமையல் கலை குறித்தான பாடம் என்று ரூபி சொல்லவேநேர்கண்டவர் அப்படியே உறைந்து போகிறார்அரசியல் அறிவியல் என்பது சமையல் கலை குறித்தான பாடம் என்று கூறும் ஒருவர் எப்படி அந்தப்பாடத்தில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்திருக்க முடியும்?

இந்த சந்தேகம் நேர்காணலை பார்த்துக் கொண்டிருந்த நேயர்களுக்கு வரவே அவர்களில் சிலர் பள்ளிக் கல்வித்துறைக்கு இது குறித்து புகார் செய்கிறார்கள்.அதன் விளைவாக ரூபி தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அந்தப் பாடம் எது குறித்தது என்று அறியாத ஒருவர் அந்தப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்றால் கீழ்க்காணும் இரண்டில் ஒன்றுநடந்திருக்க வேண்டும்

தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருக்க வேண்டும்
அயோக்கியத் தனத்தின் உச்சத்தில் நின்றுகொண்டு ஏதோ ஒரு சமூக விரோதி காசுக்காக தேர்வுத்தாளை திருத்தியிருக்க வேண்டும்.

இதில் எது நடந்திருந்தாலும் சம்பந்தப்பட்ட நபரான ரூபியும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும்.

கல்வியில் ஊழல் என்பதை சகித்துக் கொள்ளக் கூடாது

********************************************************************************     

நுங்கம்பாக்கம் ரயிலடியில் காலை நேரத்தில் ஜனத்திரளுக்கு மத்தியிலே நின்றுகொண்டிருந்த சுவாதி என்ற குழந்தை கொடூரமாக கொலைசெய்யப்பட்டிருக்கிறாள்.

ஆயிரமாயிரமாய் அதற்கான காரணங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அலசப் படுகின்றனகாரணம் எதுவாயினும் அது இந்தக் கொலையைநியாயப் படுத்திவிடாது.

இதற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி ஒரு எதிர்ப்பியக்கத்தை நடத்தியிருக்கிறதுஎதிர்க்கட்சித் தலைவர் மாண்பமை ஸ்டாலின் அவர்கள்  சுவாதியின் வீடுசென்று அவளது பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி வந்திருக்கிறார்.

இரண்டு வகையான விமர்சனங்கள் எழுகின்றன.

சுவாதி வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய திரு ஸ்டாலின் அவர்கள் ஆணவக் கொலைகள் நடந்தபொழுது கொலையுண்டவர்களின் வீடுகளுக்கு சென்றுஏன் கூறாதது ஏன்ஆணவக் கொலைகளை கண்டு கொள்ளாதஆணவக் கொலைகளை ஆதரித்த அரசியல் இயக்கங்களோடு தேர்தல் உடன்பாடு கொள்ளத்துடித்த பாரதிய ஜனதாக் கட்சி சுவாதியின் கொலைக்காக தெருவிறங்கி போராடியது அவர் பிராமணர் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகவன்றி வேறுஎதற்காக?
மற்ற ஆணவக் கொலைகள் நடந்த பொழுது பொங்கிக் கொந்தளித்த தலித் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் குறிப்பாக மாதர் சங்கங்கள் இப்போதுபொங்காதது சுவாதி ஒரு தலித் அல்ல என்பதும் அவர் ஒரு பிராமணப் பெண் என்பதுமன்றி வேறென்ன?
ஆணவக் கொலைகள் அனைத்திற்கும் ஜாதி முழுமுதற் காரணமாக இருந்தது என்பதையும் சுவாதியின் கொலைக்கான காரணம் இன்னும் கண்டடையப்படவில்லை என்பதையும் அப்படி ஒருக்கால் அவர் கொல்லப் பட்டதற்கு ஜாதிதான் காரணம் எனில் அதுவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதேஆகும்.

வன்புணரப் படுபவள்கொலை செய்யப் படுபவள் எந்த ஜாதியை சார்ந்தவளாக இருப்பினும் அவள் என் மகளேயாகும்அதேபோல அதை செய்பவன் எந்தஜாதியச் சார்ந்தவனாக இருப்பினும் அவன் மிகக் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டியவனே.

இதை சொல்பவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டியது அவசியம் என்று படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னால் ‘நக்கீரன்’ இதழில் ‘எங்கே போகிறது இந்து மதம்’ என்றொரு தொடர் வந்ததுஒவ்வொரு பிராமணனும் கடவுளிடத்தில்தனக்கு இந்த ஜென்மமே கடைசி ஜென்மமாக அமைந்து தான் இறைவனின் காலடியில் இளைப்பாறும் அருள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்களென்றும்ஒவ்வொரு பிராமணப் பெண்ணும் அடுத்த பிறவியில் தான் ஒரு பிராமணனாகப் பிறந்து அதுவே தனது இறுதி ஜென்மமாகவும்அமைந்து அத்சன்பிறகு தான் இறைவனின் காலடியில் இளைப்பாறும் பாக்கியம் வேண்டும் என்றும் வேணிக் கொள்வார்கள் என்றும் அதில் ஒரு இடத்தில்அதை எழுதிய ஜீயர் சொல்வார்.

பிராமணர்களைத் தவிர பிராமணப் பெண்களே ஆனாலும் இறைவனிடம் செல்ல இயலாது என்று இருப்பதாகத்தான் அவர் அதில் குறிப்பிடுகிறார்.

ஆக பிராமணப் பெண்களும் ஏதேனும் ஒரு பிறவியில் பிராமணர்களாகப் பிறந்தால்தான் வீடுபேறு சாத்தியம் என்றாகிறதுஅப்படியிருக்க அவர்களைபிராமணக் குலத்தில் சேர்ப்பது நியாயமில்லை என்றே படுகிறது.

கொலை என்பது எதன் பொருட்டு நடந்தாலும் ,யார் கொலை செய்யப்படினும் எதிர்ப்போம்.

*************************************************  

சமீபத்தில் NLC தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு நடந்த தேர்தலில் நான்காயிரத்தி எண்ணூறு வாக்குகளுக்குமேல் பெற்று CITU முதலிடத்திற்குவந்திருக்கிறதுஅதற்கடுத்தாற்போல் வந்த தி.மு. விற்கு 2400 வாக்குகளை ஒட்டியே கிடைத்திருக்கிறதுஆளும் கட்சியான .தி.மு. தோல்வியடைந்துபேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கான தனது உரிமையை இழந்திருக்கிறது.

தி.மு. வும் ...தி.மு. வும் கணிசமான அளவில் பணத்தை இறக்கிய போதிலும் CITU வின் வெற்றி எந்த அளவிற்கு ஆளும் கட்சியும் எதிர்கட்சியும்உழைக்கும் வர்க்கத்தின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன என்பதை படம் பிடித்து காட்டுகிறதுஇந்த வெற்றி இடதுசாரிகளின் இடத்தை அங்கீகரித்ததோடுஅவர்களது பொறுப்பு அளவு கடந்து கூடியிருப்பதையும் எடுத்துச் சொல்கிறது.

ஆனாலும் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் திமுகவும் சி.பி.எம் மும் வெற்றி பெற்றன என்று எழுதிய விநோதத்தைத்தான் விளங்கிக் கொள்ளமுடியவில்லை.

****************************************************************** 

திரைபடங்களுக்கு பாடல் எழுதுவீர்களாஎன்று கேட்கப்பட்டபோது ஒருமுறை அப்துல்ரஹ்மான் ‘ அம்மி கொத்துவதற்கு சிறி எதற்கு’ என்று பதில்கூறினார். ‘மாமல்ல புரத்திலும் அம்மி கொத்துவதற்கான தேவை இருக்கவே செய்கிறது’ என்று உடனடியாக அதற்கு கவிஞர் மு.மேத்தாஎதிர்வினையாற்றினார்என்றபோதிலும் சினிமா பாடல்கள் கொஞ்சம் மாற்றுக் குறைவான விஷயமாகவே பார்க்கப் படுகின்றனசினிமாப் பாடல்களேஅப்படி என்றால் அதில் வரும் குத்துப் பாடல்களைப் பற்ரிக் கேட்கவே வேண்டாம்.

குத்துப்பட்டு பாடல்கள் பெரும்பாலும் கொச்சையாகவே பார்க்கப் படுகின்றனஆனால் இரவு அதிலுங்குறிப்பாக பின்னிரவு நேரங்களில் ஓட்டுனர்களைவிழித்திருக்கச் செய்வதன் மூலம் பெரும்பான்மை விபத்துக்களை தடுப்பவை குத்துப் பாட்டுக்ககளே.
"குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்என்ற பிரபலமான பக்திப் பாடல்கூட குத்துப்பட்டு வடிவம்தான்.

பக்தியையே குத்துப்பட்டு வழியே தரமுடியும் எனில் சமுகத்திற்கான பாடல்களை இன்னும் இன்னும் ஏராளமாய் தரமுடியும்தான்

&********************************************************


"லியோ அண்ணன் வீடு எது பாப்பா? "
கேரம்போர்டை நகர்த்தி வழி விட்டவாறே,
இப்படியே மேல ஏறுனா இதேமாதிரி இடம் வருமாஆனா அங்க எங்கள மாதிரி யாரும் கேரம் விளையாடிட்டிருக்க மாட்டாங்க அங்க இந்தப் பக்கம்ரெண்டு வீடு இருக்கும்ரெண்டும்  பூட்டிருக்கும்அதுல தட்டாதீங்கஊருக்கு போயிருக்காங்கஅதுக்கு ஆப்போசிட்ல ரெண்டு வீடு இருக்கும்அதுல பஸ்ட்வீடு பூட்டியிருக்கும்அதுலயும் தட்டாதீங்கயாரும் குடி இல்லபக்கத்து வீட்டில் தட்டுங்க லியோ அண்ணன் வருவாங்க. "
தாயே சரண் நான்.


2 comments:

  1. நுங்கம்பாக்கத்தில் நடந்த ஸ்வாதி கொலை பற்றிய உங்கள் பதிவு தனியே ஒரு பதிவாக, புதிய தலைப்பில் வந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர். உண்மையை சொன்னால் அப்படித்தான் நினைத்திருந்தேன். கடுமையான கை வலி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...