வேறொன்றுமில்லை
எனக்கான
கிளாசை
புத்தனிடமும்
புத்தனுக்கான
கிளாசை
என்னிடமும்
தந்ததைக்கூட
பெரிதாக எண்ணாத
புத்தனுக்கு
புத்தனுக்கு
சுகர் டெஸ்ட்
எடுப்பது
நல்லதென்று
கலியன் சொன்னதில்கூட
புகாரில்லை
புத்தனுக்கும்
வயசாகுதுல்ல
என்று
கலியன்
முடித்ததுதான்
சங்கடப்படுத்திவிட்டது போல
புலம்பிக் கொண்டே
போனான்
என்னமோ
போ
கலியா
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்