என் அதிகாலை கனவில்
கலியன் கடையில்
தேநீர்
குடித்துக் கொண்டிருந்த கடவுள்
என்னைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி
கவனத்தைப் புதைத்துக் கொண்டதற்கு
இந்த இரண்டுமோ
இரண்டில் ஒன்றோதான்
காரணமாக இருக்க முடியும்
சாதி வன்முறைகளை
கொலைகளை
எப்போதுதான் தடுப்ப என்ற
என் பழைய கேள்விக்கு
இப்போதும் அவனிடம்
பதில் இல்லை என்பது ஒன்று
எனக்கு
தேநீர் வாங்கித் தருவதற்கு அவனிடம்
காசு இருந்திருக்காது என்பது இரண்டு
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்