சுமார் என்று
சொல்லப்பட்ட அறை
முகம் சுளித்து
திரும்பினால்
அந்த
குபேர மூலையின்
கதவுகளற்ற அலமாரியின்
ஒரு
சிமிண்டுப் பலகையின் கீழே
கிழிந்து தொங்கும்
ஒட்டடைக்கு
ஒரு விரக்கடைக்கு கீழே தென்பட்டதொரு
பென்சில் கிறுக்கல்
"அம்மா
நொம்மா"
பென்சிலோடு
நின்றுகொண்டிருந்த
எழுதத் தெரிந்தக் குழந்தைக்கும்
அவளது அம்மாவிற்கும்
சண்டை நடந்த
போர்க்களம்
இந்த அறை
தொங்கும்
அந்த
ஒட்டடையின்
ஒரு
விரக்கட்டைக்கு கீழே
"அம்மா
நொம்மா"
என்ற
ஒரு குழந்தையின்
அம்மாவிற்கான ஆசிர்வாதம்
ஒளிர்ந்து
விரவி மணக்கும்
அறையை
சுமாரான
அறை என்று
சொன்னவனைத்
துழாவிக் கொண்டிருக்கிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்