காஸா கவிதை 01
***********************
குழந்தையின்
பிணம் தடுக்கி
கிழவனின்
கழுத்தைப் பிடித்த
கிழவனின் பிணத்திற்கு
வலதுபுறமாக
குண்டடிபட்டு
செத்துக் கொண்டிருந்த
பாலஸ்தீனன்
சொன்னான்
பயப்படாதே
இஸ்ரேலியனே
பயப்படாதே
கொல்ல
மாட்டேன்
நீ மட்டுமல்ல
தாங்கள்
அழித்துக்
கொண்டிருப்பதாக நம்பும்
அனைவரும்
தாங்கள்
அழித்துக் கொண்டிருக்கும்
சமூகங்கள்
வீரிட்டு
எழுவதை
வாழ்ந்து
பார்த்துவிட்டுதான்
சாக வேண்டும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்