Wednesday, July 10, 2024

கவிதை 31

 

காஸா கவிதை 02
***********************
06.06.2024
வியாழக்கிழமை
நுசிரத் முகாம்
ஐ.நா பள்ளி
ஒதுங்கிய அனைவரும்
கொல்லப்பட்டிருக்கக் கூடும்
என்ற முடிவுக்கு வரும்வரை
குண்டு வீசியது
இஸ்ரேல்
டிப்பர்களில்
அள்ளிப் போனதில்
பிணங்களோடு
குற்றுயிராய் இருந்தவர்களும்
இருக்கக் கூடும்
டிப்பரில் கிடந்த
குவியலில்
கிடந்த
ஒரு குழந்தையின் கையில்
செல்
யாருக்கோ
குறுஞ்செய்தி
அடித்திருக்கிறான்
மாமா
மூன்றாவது கேட்டில் நுழைந்து
மூன்று பிணங்களைக் கடந்து
வலதுபுறம் திரும்பினால்
ஏழாவது பிணம் அம்மா
ஒன்பதாவதாக
அப்பா
அம்மாவுக்கும் அப்பாவிற்கும்
இடையில்
எப்போதும்போல நான்
நீங்கள் வரும் முன்
நான் இறந்து போயிருந்தால்
இந்த செல்லை
ஏதேனும் ஒரு குழந்தைக்கு கொடுங்கள்
அவளது மாமாவேனும்
விரைவாக வந்து
அவளைக்
காப்பாற்றட்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...