அணையைத் திறந்து விடுவதற்காக அமைச்சர் மாண்பமை ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மேட்டூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
கந்தம்பட்டி புறவழிச்சாலை அருகே ஒரு முதியவர் இரு சக்கர வாகனத்தில் அடிபட்டிக் கிடக்கிறார். அமைச்சர் காரிலிருந்து இறங்கி அந்த மனிதரை எடுத்து தன் காரில் கிடத்துகிறார். அதற்குள் அங்கு வந்துவிட்ட அவரது உதவியாளர்களிடம் அவரை ஒப்படைக்கிறார்.
அந்த முதியவருக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி கொடுக்கப் பட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப் படுகிறார்.
அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தது நெல்லையிலிருந்து பெங்கலூருக்கு சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் என்று இன்றைய தீக்கதிர் சொல்கிறது.
சொல்ல இரண்டு
1 அணை திறக்க சென்ற அந்த அவசரத்திலும் நின்று அந்த முதியவரைக் காப்பாற்றிய அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
2 இவ்வளவு நீண்ட தூரப் பயணத்திற்கு இரு சக்கர வாகனத்தைத் தேர்ந்தெடுப்பதையும், தாறுமாறான வேகத்தில் வண்டியை இயக்குவதையும் இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். உங்களை நம்பித்தான் இருக்கிறோம்
2014 ஆகஸ்ட் 11 அன்று எழுதியது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்