ஒரு அழகான செய்தியோடு முடிந்தது எனது நேற்று.
கிடைத்த செய்தி பெருமிதத்தின் உச்சிக்கே என்னை உந்தித் தள்ளியது. ஏற்கனவே இருக்கும் திமிர் போதாதென்று இன்னும் ஒரு பிடி திமிரை என்னில் போட்டு, கொஞ்சம் கர்வப் பட வைத்தது.
மதுரை சமணர் மலையின் அருகே இருந்த கருப்பசாமி கோவிலின் வாசலில் இருந்த 100 வயதான ஒரு நாவல் மரத்தை சிலர் வெட்ட முயன்றததை வர்தினி பர்வதா சென்று நான்கு மணி நேரம் போராடி ஆர்க்கியாலஜி அதிகாரிகளுக்கு தகவல் தந்து வரவழைத்து காப்பாற்றினார் என்ற தகவல்.
நான் தினமும் நாவல் பழக் கொட்டை பொடியை சாப்பிட்டு சர்க்கரையைக் கட்டுப் படுத்தி வருபவன். அந்த வகையில் ஒரு நாவல் மரம் காப்பாற்றப் பட்டதில் என் ஆனந்தம் ஏகத்திற்கும் விரிவடைந்தது.
இவர் என் தோழி தெரியுமா என்று ஊர் ஊராய் டமாரமடித்துக் கொண்டாடத் தூண்டியது

2013 இதே நாளில் எழுதியது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்