தோழர் திருவுடையான் நேற்றிரவு சேலத்தில் நிகழ்ச்சியை முடிந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது மகிழுந்து விபத்துக்குள்ளானதில் மரணமடைந்திருக்கிறார். இது மாதிரியான தோழர்களின் இழப்பு சொல்லொன்னாத் துயரினைத் தருகிறது.
25 லிருந்து 30 மேடைகளில் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.
விபத்துகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆனாலும் பின்னிரவுப் பயணங்களை நிச்சயமாக தவிர்த்துவிட வேண்டும். அதற்கேற்றார் போல் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் உரையாளர்கள் இரவு தங்கி காலை எழுந்து உணவருந்தி திரும்புகிறமாதிரி ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மட்டுமல்ல, மேடை ஊழியர்களை நிச்சயமாகக் தங்கிச் செல்லுமாறு செய்ய வேண்டும்.
திருவுடையானுக்கான தோழர் Su Po Agathiyalingam அவர்களின் இரங்கல் என்னை விசும்ப வைத்து விட்டது. “இதுமாதிரி வேண்டியவர்களின் மரணத்துக்கூட செல்ல முடிவதில்லை. தூரம் என்பதோடு வருவாயோ சேமிப்போ இல்லாத நிலையில் என்ன செய்வது” என்று எழுதியிருந்தார். படிக்க படிக்க வெடித்துவிட்டேன்
போய் வா தோழா
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்