2013 இதே நாளில் எழுதியது. ஒலிம்பிக் சூழலில் இதை மீண்டும் படிப்பது நல்லது)
ஸ்பெயினில் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில் (டோனோஸ்டி கோப்பை) மூன்றாவது இடத்தை வென்றிருக்கிறார்கள் ஜார்கண்ட் பழங்குடிப் பெண் வீராங்கனைகள்.
போட்டிக்காக வைத்திருக்கும் இருக்கும் ஒரே ஜோடிக் காலணிகளைச் சேதப்படுத்தி விடக்கூடாதென்று இவர்கள் வெறுங்கால்களுடன் பயிற்சி செய்வதைப் பார்த்த போட்டி நிர்வாகிகள் "Supergoats" என்று ஆச்சரியமும் அன்புமாய்ப் பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள்.
”எங்களால் (போட்டி முடிந்த அன்று) தூங்கவே முடியவில்லை...” - ரிங்கி குமாரி, தலைவர், யுவா அணி (சூப்பர் கோட்ஸ்) நிறைய பெண்கள் சந்தோஷம் தாங்காமல் அழுது கொண்டே இருந்தனராம். ஏனெனில் இறுதிவரை பாஸ்போர்ட் கிடைக்காமல் போட்டிக்குச் செல்வார்களா என்பதே கேள்விக்குறியாய் இருந்திருக்கிறது.
கால்பந்தாட்டத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் நம் நாட்டிற்கு இது குறிப்பிடத்தகுந்த அங்கீகாரம். ஆனால் யாருக்கு அக்கறை? நமது விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், அவ்வளவு ஏன், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (All India Footbaal Federation - AIFF) தலைவர் ப்ரஃபுல் பட்டேல் கூட இவர்களின் வெற்றியை அறிந்திருக்கவில்லை.
..இதே பெண்கள் தான் தங்கள் பாஸ்போர்ட்டுக்காக அரசு அலுவலகங்களுக்குச் சென்ற போது, கன்னத்தில் அறையப்பட்டனர், தரையைப் பெருக்கித் துடைக்குமாறு ஏவப்பட்டனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்ததற்காக எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டு தாங்கள் பிறந்த மாண்புமிகு “இந்தியா”வுக்குப் பெருமை தேடித் தந்திருக்கின்றனர்.
மேலும், இவர்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலத்திலேயே மிகவும் வறுமையானதும், குழந்தைத் திருமணங்களும், சிறுமிகள் கடத்தப்பட்டு விற்பதும் அதிக அளவில் நடைபெறுவதுமான ருக்கா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்