Wednesday, August 24, 2016

எங்க கணக்கு சார்

காலை ரெங்கராஜ் சார் அலைபேசியில் அழைத்தார்.
1977-78 இல் எனக்கு பத்தாம் வகுப்பு கணக்கெடுத்தவர். என் மீது அன்பைப் பொழிபவர்களில் அவர் யாருக்கும் இரண்டாமவர் இல்லை.
திடீரென பள்ளிக்கு வருவார். பேசிக் கொண்டிருப்பார். போய்விடுவார்.
திடீரென சத்திரம் வாடா என்பார். ஓடுவேன். “சும்மாதான் , பார்க்கனும்னுதான் கூப்பிட்டேன்” என்பார்.
கையைக் கட்டிக் கொண்டு நிற்பேன். “ சரி கிழம்பு. புள்ளைகள பத்திரமா பார்த்துக்க “ என்பார். திரும்பி விடுவேன்.
அப்பாவின் மரணத்திற்கு வந்தவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு அழுதார். தேற்றினேன்.
இன்று காலை அழைத்தார்.
“ வணக்கம் சார். சொல்லுங்க.”
“ எங்கடா இருக்க.”
“ வீட்ல”
“ வீட்லன்னா. கடவூரா? பெரம்பலூரா?”
” பெரம்பலூர்”
” சரி, வரேன். வந்ததும் போன் செய்றேன். வந்து கூட்டிட்டுப் போ”
“ சரிங்க சார்”
“ வந்தார்.
” வாங்க சார் போகலாம்”
“ வேண்டாம் இங்கேயே பேசலாம்”
பேசிக் கொண்டிருந்தோம்.
“ சரி. புறப்படவா.”
“ என்னங்க சார் வீட்டுக்கு வராம”
” பார்க்கனும்னு தோணுச்சு. வந்தேன். பார்த்துட்டேன். கிழம்பறேன்”
“ என்ன சார் இது. அப்பாவும் போயிட்டாங்க. நீங்களும் வீட்டுக்கு வராம போறீங்க”
“ அப்பா போயிட்டாரா. இருக்கேனேடா”
இது வரைக்கும் அழாமல் அடித்ததே பெரிது. இனி ஒரு வார்த்தை அடித்தாலும் விசும்பி விடுவேன்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...