"cow bakth is different from cow sevak" என்று மாண்பமை பிரதமர் அவர்கள் மிகுந்த கோபத்தோடு பேசியிருக்கிறார்.
"பசு பக்தி இருக்கலாம் ஆனால் பசுபாதுகாப்பு என்று பெயரில் வெறியாட்டம் போடுவதை சகித்துக் கொள்ள முடியாது" என்பதாக நகர்ந்த அவரது உரை அத்தோடு நிற்கவில்லை.
பசு பாதுகாப்பு என்ற பெயரால் வெறியாட்டம் போடுபவர்களது கடந்தகால செயல்பாடுகள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் அறிக்கை தயாரித்து தரவேண்டும் என்றும் அவர்கள் பகலில் பசு பாதுகாவலர்களாகவும் இரவில் சமூகவிரோத குற்றவாளிகளாகவும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்
இவ்வளவு கடுமையான விமர்சனத்திற்கு ஆளானவர்கள் பிரதமரது இயக்கத்தை சேர்ந்தவர்கள்தாம்.
சமூகக் குற்றவாளிகள் என்று தெரிகிறதே பிறகேன் பிரதமர் அவர்களே அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
உனாவில் தலித் மக்கள் மீது ஜாதிய வெறியர்கள் நிகழ்த்திய வன்முறைக்கெதிராக ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியுள்ள குஜராத் பேரணி பிரதமர் அவர்களை தனது சொந்த இயக்கத்தவர்க்கு எதிராகவே இப்படி பேச வைத்துள்ளது.
உனா யாத்திரை வெல்லட்டும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்