"உங்களுடைய 'அந்தக் கேள்விக்கு வயது 98' ஐ யாரேனும் மறுபதிப்பு செய்தால் நல்லதுன்னு வண்ணதாசன் சொன்னார். பிரதி கைல இருக்கா?" என்று திரு சந்தியா சௌந்தரராஜன் சொன்னபோது சத்தியமாய் எனக்கிரண்டு ரெக்கைகள் முளைத்தன.
இப்படியாக அவர் சிபாரிசில்தான் அந்த நுல் மறுபதிப்பைக் கண்டது.
அதற்கடுத்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தியா ஸ்டாலில் நின்று கொண்டிருக்கிறார். எப்படி அறிமுகம் செய்துகொள்வது என்ற கூச்சத்தோடே ஒதுங்கி நிற்கிறேன்.
என்னைப் பார்த்ததும் அவரே 'என்ன எட்வின் நலமா?' என்று கேட்டவாறே என்னை நோக்கி வருகிறார்.
எனது வலது கையை எடுத்து தன்னிரு கைகளுள் வைத்துக் கொண்டவாறே பேசுகிறார்.
அப்போது அங்கு வந்த வண்ணநிலவனிடம் என்னை அறிமுகம் செய்கிறார்.
திரும்பி " நடராஜன் எட்வின் எழுத்துதானே தெரியும் உங்களுக்கு. பேச்ச ஒரு தரம் கேளுங்க" என்று சந்தியா நடராஜனிடம் கூறுகிறார்
யாருக்கு வரும் இத்தனை பெருந்தன்மை?
என் காலம் தாண்டியும் மகிழ்ந்து நீண்டு வாழவேண்டும் சார் நீங்கள்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்