சமஸ்கிருதம் பற்றி எல்லாத் திக்கிலிருந்தும் கருத்துக்கள் வந்தபடியிருக்கின்றன.
சமஸ்கிருதம் சுத்தமாக வழக்கொழிந்து போயிருக்கிறது என்பதில் எங்களுக்கு எந்தவிதமான மகிழ்ச்சியும் இல்லை. மாறாக அதன்பொருட்டு வருத்தமும் கவலையுமே எங்களுக்கு.
சமஸ்கிருதம் மட்டுமல்ல எந்த ஒரு மொழி வழக்கொழிந்து போனாலும் இதே அளவு வருத்தமும் கவலையும் படவே செய்வோம்.
எல்லோரும் நினைப்பதுபோல நாங்கள் ஒருபோதும் இந்தியை எதிர்த்ததே இல்லை. பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக திணித்ததையே எம் முன்னோர்கள் எதிர்த்தனர்.
அறுபதுகளின் அந்திம ஆண்டுகளிலும் தமிழ் மண்ணில் காசு கொடுத்து இந்தியைக் கற்றுக் கொண்டவர்களும் பட்டம் பெற்றவர்களும் உண்டு.
எங்கள் மீது சமஸ்கிருதத்தை நீங்கள் திணிக்கும் உங்களது ஆணவத்தை எதிர்க்கிறோமே அன்றி சமஸ்கிருதம் என்ற மொழி வளர்வதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
சமஸ்கிருதத்தை நீங்கள் வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் இத்தகைய திணிப்பு அதற்கு ஒருபோதும் உதவாது. மாறாக எதிர் விளைவுகளையே தரும். தற்காலிகமான ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதன் மூலம் அந்த மொழியின் பெயர் பேசப் படலாம். ஆனால் அதுவும்கூட ஒருவிதமான வெறுப்போடும் எதிர் மறையோடும் இருக்கும்.
மீண்டும் மீண்டும் தமிழர்களாகிய நாங்கள் சொல்வது இதைத்தான்,
எங்கள்மீது சமஸ்கிருதம் திணிக்கப்பால் மட்டுமல்ல வேற்றுமொழி மக்கள்மீது தமிழ் திணிக்கப்பட்டாலும் அதை எதிர்க்கவே செய்வோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்