Monday, August 15, 2016

வாங்கினோம் விற்கிறோம்

"வாங்கினோம்
விற்கிறோம்”
என்று சம்பத் இளங்கோவன் எழுதியிருப்பதாக ஷாஜஹான் எழுதியிருந்தார். உட்கார முடியவில்லை. இவ்வளவு தெறிப்பாய் சொல்லமுடிகிறதே.
அவரது பக்கம் பாய்ந்தேன்.
வீட்டுப்
பாடத்திலிருந்தும்..
மேனேஜரின்
திட்டுகளிலிருந்தும்...
வாய்த்தால்
சமையலறையிலிருந்தும் கூட!
நாளை ஒருநாள்
"விடுதலை நாளே"!
அடடா.
மனுஷனுக்கு எங்க மேல எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். வெள்ளி சனி ஞாயிறு , மூன்று நாள் விடுமுறை எனில் வீட்டுப் பாடமும் மூன்று மடங்காகும் இளங்கோவன்.
“மிச்சமிருக்கிறது
மிளகின் நிழல்
எறும்புக்குப் போக”
என்று எழுதியிருந்தேன்.புரியவில்லை என்றார்கள் சிலர். புரிகிற மாதிரி எழுதுகிறார் இளங்கோவன்
விரிந்த
பாம்பின்
நிழலில்
இளைப்பாறும்
தவளைகள்!
வாய்ப்பு கிடைக்கையில் சம்பத் இளங்கோவன் பக்கம் போய்வாருங்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...