Saturday, August 20, 2016

ஜாதி மதத்தினும் கொடியது, எதனினும் கொடியது

//// தலித்துகளுக்கும் உயர் சாதிக் காரர்களுக்கும் தனித் தனியே தேவாலயங்கள் உள்ள தமிழக கிராமங்கள் ஏராளம். திருச்சி போன்ற பெருநகரங்களின் மையப் பகுதியிலேகூட தலித்துகள் கல்லறைகளுக்கும் உயர்சாதியினர் கல்லறைகளுக்குமிடையே தடுப்புச் சுவரும் தனித் தனி நுழைவு வாயில்களும் உள்ள கல்லறைத் தோட்டம் இன்றைக்கும் உண்டு.
தொண்டமாந்துறை என்றொரு கிராமம் பெரம்பலூர் மாவட்டத்திலே உள்ளது. அழகான தேவாலயம், அழகான தேர். ஆனால் அந்தத் தேரோ குடியானத் தெருவுக்குள் மட்டுமே சுற்றி அடங்கும். சேரிக்கும் தேர் வரவேண்டும் என்று உரிமை கோரினார்கள்.சேரிக்குள் தேர் நுழைந்தால் சாமி தீட்டுப் பட்டுவிடும் என்றார்கள். தங்கள் தெருவுக்குள்ளும் தேரோட்டம் வேண்டும் என்று எண்ணிய தலித்துகள் தாங்களே ஒரு தேரை செய்து மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு. அதை குடியானத் தெருவிற்குள்ளும் கொண்டுபோக வேண்டும் என்கிற பெருந்தன்மை சேரி கிறிஸ்தவர்களுக்கு இருந்தது. அதைத் தடுத்த குடியானத் தெருக் கிறிஸ்தவர்கள் சொன்னார்கள் " சேரிச் சாமி எங்க தெருவுக்கு வரக் கூடாது"
"ஏன்?"
"உங்க சாமி எங்க தெருவுக்குள்ள வந்தா எங்க தெரு தீட்டுப் பட்டுடும், " கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பதில் வந்தது.
குடியானத் தெரு மாதா சேரிக்குப் போனால் சாமி தீட்டுப் பட்டுவிடுமாம். சேரி சாமி குடியானத் தெருவிற்குள் வந்தால் தெரு தீட்டுப் பட்டு விடுமாம் . என்றால் சேரி மாதாவும் தலித்துதானா என்ற கேள்வி எழும்.
(இப்படியும் கொள்ளலாம். எந்த சாமி சேரிக்குள் வந்தாலும் சேரி தீட்டுப் படாது. காரணம் அழுக்காய் இருந்தாலும் சேரி தூய்மையானது. எந்தத் தெருவிற்குள் போனாலும் சேரிச் சாமி தீட்டுப் படாது. காரணம் சேரி மக்களைப் போலவே சேரிச் சாமியும் நெருப்பு)/////
( 12 ஆண்டுகளுக்கு முன்னர் ‘லோமியோ’ என்ற நாவலுக்கான என் விமர்சனத்தில் எழுதியது. இது அப்படியே அப்பட்டமாக சேஷ சமுத்திரத்திற்கும் பொருந்துகிறது.
ஜாதி மதத்தினும் கொடியது, எதனினும் கொடியது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...