" வேண்டுமானால் என்னைச் சுடுங்கள், தலித்துகளை கொல்லாதீர்கள்" என்று நீங்கள் சொன்னதாக அறிகிறேன் மாண்புமிகு பிரதமர் அவர்களே.
நீங்கள் கோரிய இரண்டையும் அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்பது எனக்கே தெரியும். உங்களுக்குத் தெரியாதா?
தலித்துகளை கொல்லாதீர்கள் என்ற உங்கள் கூற்று தலித்துகளை உங்கள் ஆட்கள் கொல்கிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
எனில் கொலை செய்கிறவர்கள்மீது ஏனின்னும் நடவடிக்கை இல்லை?
தலித்துகள் மீது கைவைத்தால் போலீஸ் சுடும், ராணுவம் சுடுமென்று ஏன் நீங்கள் கூற மறுக்கிறீர்கள்?
அது சரி, தலித்துகளை கொல்லாதீர்களென்கிறீர்களே அவர்கள் இந்து இல்லையா பிரதமர் அவர்களே?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்