Saturday, August 13, 2016

32

அம்மா
அப்பா
அப்பாயி
அண்ணன்கள்
அண்ணிகள்
குழந்தைகள்
அப்புறம் நான்

கொஞ்சம் பெரிசுதான்
விடுங்கள்

குடும்ப அட்டையில்
கடைசிப்பக்க விளிம்புவரை
பெயர்கள் நீண்டாலும்

கழிவறை ஒன்றுதான்

நகராட்சிக் கழிவறை
வரிசைதான் காலையில்

எழுப்பொலி வைத்துப் போனதுமுண்டு
நிம்மதியாய்க் கழிக்க

எழுப்பொலி
எல்லா அறைகளிலும் ஒலிக்க
புரிந்தது

வதந்தி போல் பரவியிருக்கிறது
நுணுக்கம்

பற்கள் கடித்து
கால்கள் நெருக்கி

அவசர அவஸ்தையில்
கண்கள் செருக

கழிவறை வாளியில்
நீர் விழும் சத்தம்

ஏ.ஆர் ரஹ்மானாவது
இளையராஜாவாவது

வலிக்கும் அவஸ்தை
இடம் கிடைத்த நிம்மதி

தாள் போடும் வேளை
சிணுங்கியது தொலைபேசி

“கொஞ்சம்
யாருன்னு பாரேன்”

குபுக்கென்று கொப்பளித்தது
அம்மாவின் ஞானம்

“எந்தக் கங்காரனோ
ஆமா
இப்ப நீ
எந்த ஊர்ல இருக்கிறதா
சொல்லித் தொலைய?”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...