Monday, March 31, 2025

அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை

அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பதை அதிமுகதான் முடிவுசெய்ய வேண்டும்

அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை

ஜெயலலிதா இறந்தது முதலே அதிமுகவை தன் கட்டுக்குள் கொண்டுவந்து கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்வதற்கான முயற்சியில் பாஜக இறங்கியது

கிட்டத்தட்ட தன் கட்டுக்குள் கொண்டும் வந்துவிட்டது

தலைவர்கள் விலைபோய்க்கொண்டு இருக்கிறார்கள்

ஆனாலும் பாஜக உணராததும்

ஒரு போதும் அதனால் உணர்ந்து கொள்ள முடியாததுமான ஒன்று உண்டு

திமுகவோ அதிமுகவோ,

தொண்டர்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள்

ஒரு கட்டத்தில் அவர்கள் விலை போன தலைவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு 

தமக்கான தலைவனைத் தேர்ந்தெடுப்பார்கள்

31.03.2025

Sunday, March 30, 2025

“போற்றா ஒழுக்கம்”

”நீ இல்லை
இனி எப்போதும் இல்லை
உன்னிடம் சொல்லாத
உனக்கான இந்த வார்த்தைகளை வைத்துக்கொண்டு
என்ன செய்ய?”
என்று 21.02.2024 அன்று எழுதியிருக்கிறாள் Kalai Mani.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஒரு மாதம் கடந்து சில நாட்களாகிவிட்டன
எத்தனை வலி?
வலியை எவ்வளவு லாவகமாக படிக்கிறமாதிரி கொடுக்கத் தெரிகிறது
பாருங்கள்,
யாருக்கான சொற்களையோ அவர்கள் இல்லாத வேளையில் சுமந்து தெரிவது எவ்வளவு அவஸ்தை
21.02.2024 அன்றே அவளடு பேசி ”எத்தனை அழகு” என்று சொல்லி இருக்க வேண்டும்
ஒருக்கால் அன்று அப்படி தட்டிக் கொடுத்திருந்தால் ஒரு நூறு பக்கங்களை அவள் எழுதி இருக்கக் கூடும்
“எத்தனை அழகு” என்ற அவளுக்கான சொற்களை சொல்லாமலே சுமந்து திரிந்திருக்கிறேன்
இளங்கோ சொல்வதுதான்
“போற்றா ஒழுக்கம்” புரிந்திருக்கிறேன்
இந்தக் கவிதையைக் கொண்டாடாத எல்லோரையும் என்பொருட்டு மன்னித்துவிடு கலை
எழுதிக் குவி

30.03.2025

பிஞ்ச செருப்பையும் ...

on this day பார்த்துக்கொண்டிருக்கிறேன்

சென்ற வருடம் இதே நாளில்,
“மொழி உணர்வை பிஞ்ச செருப்பைப் போலக் கழட்டிக் கிடாச வேண்டும்” என்று தனக்கே உரிய கேவலமான உடல்மொழியோடு அண்ணாமல் கூறியிருக்கிறார்
சென்ற ஆண்டு அவருக்கு சொன்ன பதில்தான் இப்போதும்
தமிழர்கள் பிஞ்ச செருப்பையும் ஒரு காரியத்திற்காகப் பயன்படுத்துவார்கள்
வேண்டாம் அண்ணாமலை

இதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்க

 அமித்ஷாவை எடப்பாடி அவரது கோஷ்டியோடு சந்தித்தாராம்

இப்போது செங்கோட்டையன் சந்தித்திருக்கிறாராம்
ஸ்டாலின் அவ்வளவுதானாம்
லூசுங்களா,
அமித்ஷா பேரைச் சொன்னாலே தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் 1000 வாக்குகள் குறையும்
அவரைச் சந்திக்க நினைத்தால் இன்னுமொரு 1000 வாக்குகள் குறையும்
சந்தித்தால் இன்னுமொரு 1000 வாக்குகள் குறையும்
அதுகுறித்து பெருமையாக பேசினால் இன்னுமொரு 10,000 வாக்குகள் குறையும்
என்னமோ போனாங்களாம்
அமித்ஷாவப் பாத்தாங்களாம் ....
அட லூசுங்களா
இதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்க
உங்க தெருவுலேயே யாராவது வீடு கட்டிட்டு இருந்தா
அங்க போய் கொஞ்சம் மணலெடுத்து
தலையில் போட்டுட்டு வந்திருக்கலாமே
0 others

Saturday, March 29, 2025

கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள் விஜய்

"மரம்
வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்
மரம்
நடுவதற்காக "
என்ற கவிதை எண்பதுகளில் ரொம்பப் பிரபலம்
இந்தக் கவிதைக்கு நேற்றைய தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா பொழிப்புரை எழுதினார்
2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழித்துவிட்டு தங்களது மன்னரை ஆட்சியில் அமர்த்துவார்களாம்
விஜய் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்
காலம் நிறைய இருக்கிறது
கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள் விஜய்
29.03.2025

Friday, March 28, 2025

வருடத்திற்கு 1000 கோடி எனில்

 இன்று தவெகவின் பொதுக்குழு கூடியிருக்கிறது

அதன் முக்கியப் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது

வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த தங்கள் தலைவர் அதை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருப்பதாகக் கூறுகிறார்

மகிழ்ச்சி

நான் 30 விழுக்காடு வருமான வரி கட்டிக்கொண்டு இருந்தவன்

அதற்குமேல் இருக்கிறதா என்று தெரியவில்லை

வருடத்திற்கு 1000 கோடி எனில்

எப்படிப் பார்த்தாலும் வருடத்திற்கு 300 கோடி ரூபாய் வருமான வரி கட்டியிருக்க வேண்டும்

கட்டினாரா என்பதை அவர் பொதுவெளியில் நிறுவ வேண்டும்

அல்லது வருமான வரித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆதவ் சொன்னது பொய் எனில்

இவர்கள் சொல்வதனைத்தும் பொய் என்பதை மக்களிடம் நாம் கொண்டுபோக வேண்டும்

28.03.2025

ஆத்திகுடி 11


 

பார்த்ததில் இருந்து கிடந்து பிசையுது

 



இந்தப் படத்தைப் பார்த்ததில் இருந்து கிடந்து பிசையுது


டில்லி பாபு

10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்

கண்ணியமான அரசியல்வாதி

இதை போராட்டமாகக்கூட கொள்ள முடியாது

திண்டிவனத்தில் இருந்து ஆந்திரா நகரி வரைக்குமான மற்றும் NH 205 தேசிய நெடுன்சாலைத் திட்டத்திற்குமாக நிலம் கொடுத்த திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை

அதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், CPM கட்சியும் போராடிக்கொண்டிருக்கின்றன

அதன் ஒரு பகுதியாக 26.03.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப் போனபோதுதான்

தோழர் டில்லி பாபு இப்படி நடத்தப்பட்டிருக்கிறார்

திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் திரு அந்தோணி கெட்டவார்த்தைகளால் வைதபடியே டில்லி பாபுவை இழுத்து போய் கைது செய்திருக்கிறார்

மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்து மனு கொடுப்பது என்பது அவ்வளவு மோசமான செயலாகிப் போனதா என்பதை ஸ்டாலின் சார் விளக்க வேண்டும் 

பாலியல் வழக்கு

காவல்துறை விசாரனைக்கு அழைக்கிறது

“முடியாது இப்ப என்ன பன்னுவ” என்று ஆணவத்தோடு பேச, கூடியிருந்தவர்கள் குதூகலித்துக் கொண்டாடியதை வேடிக்கைப் பார்க்கிறது தமிழ்நாடு காவல்துறை

 ஒரு வழியாக விசாரனைக்கு வருகிறார். கோஷத்தோடு அவரை வரவேற்க ஒரு கூட்டமே காவல்நிலையம் முன்பு திரள்கிறது

சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள்

காவலர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்

நியாயமா ஸ்டாலின் சார் 

Thursday, March 27, 2025

செருப்பு விசயத்துலயே .

 தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி இல்லைனு அண்ணாமலை சொல்றாரே மாப்ள

அத்தைக்கும் மீசை முளைக்கலாம் ஆனால் பாஜக வராது என்பது வேறு

செருப்பு விசயத்துலயே அந்தப் பையன நம்ப முடியலையேடா

எடப்பாடி சார் வேண்டுமானால் பம்மலாம்

 நாகை மாவட்டத்தில் உள்ளது தலைஞாயிறு பேரூராட்சி

15 உறுப்பினர்கள்

ஏழு பேர் திமுக

ஏழு பேர் அதிமுக

ஒருவர் பாஜக

அதிமுகவும் பாஜகவும் இணைந்து அதிகாரத்திற்கு வருகிறார்கள்

அதிமுகவைச் சேர்ந்த திருமிகு செந்தமிழ்செல்வி பேரூராட்சி தலைவர்

பாஜகவின் கதிரவன் இணைத் தலைவர்

சுவாரசியம் என்னவென்றால்

திமுகவும் அதிமுகவும் இணைந்து பாக்க கதிரவனை இம்பீச் செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை 25.03.2025 இந்து தருகிறது

எடப்பாடி சார் வேண்டுமானால்  பம்மலாம் அமித்ஷா சார்

பாஜக விசயத்தில் திமுக அதிமுக ஊழியர்கள் இணைந்து கூட பாஜகவை வீழ்த்துவார்கள்

கவனம்

27.03-2025

Wednesday, March 26, 2025

திமுக கூட்டணியை இவர்கள் கெட்டிப்படுத்தி இருக்கிறார்கள்

 உறவினர் வீடுகளில் தொடர் ரெய்டுகள்

முன்னாள் அமைச்சர்களின் கழுத்தைக் குறிபார்த்து தொங்கும் கத்திகளாக ஊழல் வழக்குகள். அதனால் அவர்கள் தரும் நெருக்கடி
போக, இன்னொரு பக்கம் கொடநாடு வழக்கு
எடப்பாடி சாரால் வேறு எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது
ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்றுப் பிழை
தங்களுக்கு எதிரான இன்னொரு காரியத்தையும் இதன் மூலம் இவர்கள் செய்திருக்கிறார்கள்
இதன்மூலம் உடைந்தால் பாஜக வந்துவிடும் என்ற அச்சத்தை கொடுப்பதன்மூலம் திமுக கூட்டணியைக் கெட்டிப்படுத்தி இருக்கிறார்கள்

Monday, March 24, 2025

சட்டமும் ஒழங்கும்...

 தோழர் Angulekshmi E  அவர்களின் தம்பி மற்றும் பேரனை சமூக விரோதிகள் திருப்பூரில் வெட்டிவிட்டு தப்பியோடி இருக்கிறார்கள்.

இருவரும் விரைந்து குணமடைய வேண்டும்

சட்டம் ஒழுங்கு சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை என்பதை முதல்வர் அவசியம் உணரவேண்டும்

24.03.2025

எல்லாம் அந்தக் கொடி தந்த தெம்புதாம்பா

 இவர் போராடி இருக்கலாம்

அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கலாம்
ஆனாலும் இனி இவரால் ஒன்றும் வாய்க்காது
இவரைப் போய் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று
தோழர் Shanmugam Perumal அவர்களையும் அவரைத் தேர்ந்தெடுத்த கட்சியையும்
போகிற போக்கில் எழுதிவிட்டு போயிருந்தார்

எப்போதும் நான் மதிக்கும்
அவரது நான்கு வரி இரங்கலுக்காகவே அவருக்கு முன்னால் போய்விட வேண்டும் என்று நான் ஆசைப்படும் என் மரியாதைக்குரிய நண்பர்
நண்பர்கள் சுட்டினார்கள்
இதற்கிடையில் தோழர் P.S அவர்களோடு இரண்டரை மணி நேரம் பயணிக்கும் வாய்ப்பு முந்தா நாள் கிட்டியது
இடையே சொன்னார்
வாச்சாந்தி போராட்டம் குறித்து ஒரு பெண்ணிடம் நேர்காணல் எட்வின்
இத்தனை வலி, இத்தனை இழப்பு, இத்தனை தாமதம்
இத்தனையையும் எந்தத் தெம்பில் தாங்கி, விடாது போராடினீர்கள்? என்று கேட்டதும் அந்தப் பெண்
எல்லாம் அந்தக் கொடி தந்த தெம்புதாம்பா என்று கட்சிக் கொடியைக் காட்டினாராம்
P.S போராடியாதாக PS அவர்களை வைத தோழரே பதிந்திருக்க
கொடி போராடியாதவே P.S கருதுகிறார்
இவ்வளவுதான்

தாய்மொழியில் பெயர்ப் பலகை



22.03.2025 அன்று சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டுக்குழுக் கூட்டத்தில்

கலந்துகொண்ட தலைவர்களின் பெயர்ப் பலகைகள் அவர்களது தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டிருந்தன

சிறப்பு ஸ்டாலின் சார்

Sunday, March 23, 2025

இதை எழுதியபோது அவருக்கு வயது வெறும் 23

 22.03.1931

பகத்சிங் கொல்லப்பட்டதற்கு முதல் நாள்
அவர் தனது இறுதி கடிதத்தை எழுதுகிறார்
அவர் உயிர் வாழ்வதற்கு ஆசைப்படுகிறாரா என்ற கேள்வி அன்றைக்கு சமீபத்தில் சில நண்பர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக அது அமைந்திருக்கிறது
உயிர் வாழும் ஆசை அனைவருக்குள்ளும் இயல்பாகவே இருக்கும். அப்படியாகவே அந்த ஆசை தனக்கும் இருக்கிறது என்றும் அதை மறைப்பதற்கு தான் விருபவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் கூறுகிறார்.
அனால் தான் உயிர் வாழ்வதற்கு நிபந்தனை உண்டு என்று கூறுகிறார் . தன்னை வெகுவாக வசீகரித்த புரட்சிக் கட்சியின் தியாகங்களும் சித்தாந்தமும் தன்னை ஒரு சிறைக்கைதியாகவோ அடுத்தவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவனாகவோ ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறுகிறார்.
அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதைவிட சிரித்தபடியே தான் தூக்குமேடை ஏறும் காட்சியை இந்தியத் தாய்மார்கள் பார்த்தால் அது ஒரு உத்வேகத்தை அவர்களுக்கு கொடுக்கும் என்றும்
அந்தத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பகத்சிங்குகளாக வளர்ப்பார்கள் அல்லது அந்தப் பிள்ளைகள் தாங்களாகவே பகத்சிங்குகளாக மாறும்போது அதற்கு தடை சொல்லாமல் அனுமதிப்பார்கள்.
அப்போது முழு மனதுடன் ஆசை ஆசையாய் ஒரு பேரெழுச்சி திரண்டு வரும்
அந்தப் பேரெழுச்சியை ஏகாதிபத்தியத்தால் எதிர்கொள்ள முடியாது.
இது தூக்குமேடை ஏறுவதற்கு கிட்டத்தட்ட 15 மணிநேரத்திற்கு முன்னதாக பகத் எழுதிய கடிதம்
வணக்கம் பகத்

23.03.2025

Saturday, March 22, 2025

இன்று நடந்தது மிகவும் சரியானது

 நேற்று உங்கள் P.S தோழர் கலந்துகொண்ட போராட்டத்தில் காவலர்கள் அவ்வளவு அநாகரிகமாக நடந்துகொண்டதைப் பார்த்த பிறகுமா மாப்ள

இன்றைக்கு நடந்த தொகுதி மறு விரைக்கான எதிர்ப்புக் கூட்டுக்குழுக் கூட்டத்திற்காக முதல்வரைப் பாராட்ட முடிகிறது உன்னால்?

நிச்சயமா,

நேற்று நடந்தது தவறு

தவறென்கிறோம்

இன்று நடந்தது மிகவும் சரியாது

ஸ்டாலின் சாரைத் தவிர யாராலும் முன்னெடுக்க முடியாதது

இதை கொண்டாட்டத்தோடு பாராட்ட வேண்டும்

பாராட்டுவோம்

22.03.2025


நல்லது செய்ய வேண்டும்

 அன்பிற்குரிய முதல்வர் அவர்களே,

தகுதி மறு வரையறையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக நீங்கள் இன்று ஏற்பாடு செய்திருக்கக் கூடிய கூட்டமைப்புக் கூட்டம் நியாயமானது

வெற்றிபெற வாழ்த்துகிறோம்

மாவட்டத் தலைநகரங்களில்  நாளை நடைபெற உள்ள ஜேக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் பெருந்திரள் பட்டினிப் போராட்டமும் நியாயமானது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்தவர் 

எனவே, நாளை நடக்கும் பட்டினிப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து நீங்கள்  அணுக வேண்டும் என்றும்

தலைவர்களை அழைத்துப் பேசி நல்லது செய்ய  வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்

22.03.2025

மக்களுக்கான போராட்டத்திற்கு பிறகுதான்

 மலையடிக் குப்பம் 

இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது நேற்றிரவு 9 மணி

இன்று காலை தோழர் Shanmugam Perumal பெரம்பலூர் வரவேண்டும்

முந்தாநாள் அவர் மதுரையில் இருந்தார்

நேற்று மாலை ஆறு மணிக்கு விடுதலை என்றதும்

ஒரு முடிவுநோக்கிய பேச்சுவார்த்தையைத் தொடங்காமல் நகரமாட்டோம். வேண்டுமானால் ரிமாண்ட் செய்துகொள்ளுங்கள் என்கிறார்

மக்களுக்கான போராட்டத்திற்கு பிறகுதான் நிதிபெறுவது உள்ளிட்ட வேறு எதுவும் எங்களுக்கு


22.03.2025

Friday, March 21, 2025

இனி போராட்டத்தின் திசையை பாதிக்கப்பட்ட மக்கள் தீர்மானிப்பார்கள்

 போலீஸ் தாக்குதலில் அடிபட்டு மயக்கமடைந்த தாயொருத்தியை நான்கைந்து பிள்ளைகள் தூக்கிக்கொண்டு போகிறார்கள்

அப்படித் தூக்கிப்போகும்போது தங்களது இன்னொரு கையில் அருவாள் சுத்தியல் கொடியை இறுக்கிப்பிடித்தபடியும் கோஷமிட்டபடியும் சென்ற மலையடிக் குப்பம் மக்கள் ஒன்றைச் சொல்கிறார்கள்
இனி போராட்டத்தின் திசையை பாதிக்கப்பட்ட மக்கள் தீர்மானிப்பார்கள்
தலைமை தாங்கி நெறிப்படுத்தினால் போதும்
இந்த நிலைக்கு கடலூர் தோழர்களின் உழைப்பு மகத்தான

ஆத்திசூடி 10

 


கல்வியெனில் மாகாணம்தான்

 மாகாணப் பட்டியலுக்கு கல்வியை ட்ரம்ப் கொண்டுபோக இருப்பதாக தகவல்கள் வருகின்றன

எந்த நாடானாலும் மாகாணங்களிடம் கல்வி இருப்பதே சரி என்ற வகையில் இதை வரவேற்கலாம்

நிதி உள்ளிட்டு எங்கெங்கெல்லாம் மாகாணங்களுக்குப் பிரச்சினை வருகிறதோ

அதை பேசியோ போராடியோ சரிசெய்துகொள்ள வேண்டும்

Thursday, March 20, 2025

இதை அதிர்ச்சி என்று குறுக்குவது ...

 



இது ஆணாதிக்கம்
இது குழந்தை விரோதம்
இது அசிங்கம்
இது அயோக்கியத்தனம்
இது மனித விரோதம்
இதை அதிர்ச்சி என்று குறுக்குவது மேலே சொன்ன அத்தனையும்

20.03.2025

அவருக்கு ட்ரம்பையும் தெரியும்

 சுனிதா சந்திக்கப் போகும் தலைவலிகள் என்று நண்பர்கள் பட்டியலிட்டபடியே இருக்கிறார்கள்

அவரது பெரிய தலைவலியே ட்ரம்ப்தான்

அவர் சொன்னால்தான் 

அவர் சிக்கினாரா அல்லது

மகிழ்ந்து பணியாற்றினாரா தெரியும்

அவருக்கு ட்ரம்பையும் தெரியும்

உண்மையை சொன்னால் ட்ரம்ப் என்ன செய்வாரென்பதும் தெரியும்

மூன்று வாய்ப்புகள்தாம் அவருக்கு

உண்மையை சொல்லி விzளைவுகளை எதிர்கொள்வது என்பது ஒன்று

பொய்சொல்லி தப்பித்தலென்பது இரண்டு

மௌனமாக இருந்து விடுவதென்பது மூன்று

பார்ப்போம்

20.03.2024

ஆத்திசூடி 09

 


Wednesday, March 19, 2025

ஆத்திசூடி 08

 


ஆத்திசூடி 07

 


அவரே விரும்பிப் பெற்ற பணிநீட்டிப்பு

சுனிதா வில்லியம்ஸ் வானில் சிக்கித் தவித்தார்

படாதபாடு பட்டார்

ட்ரம்ப் கேட்டுக்கொண்டதற்கிணங்க

எலான்மஸ்க் காப்பாற்றினார் என்ற அளவிற்கு நீள்வதெல்லாம்

அமெரிக்க அரசியலின் அசிங்க முகம்

அவர் சென்ற விண்களம் பழுதானது என்னவோ உண்மைதான்

ஆனால், அவர் விரும்பியிருந்தால் முன்னமே திரும்பியிருக்கலாம்

அவரே விரும்பிப் பெற்ற பணிநீட்டிப்பு காலத்தை நிறைவு செய்து திரும்பியிருக்கிறார்

கொஞ்சம் விரிவாக ஏப்ரல் Kaakkai Cirakinile இதழில்

Tuesday, March 18, 2025

நான் போகும்வரை யாரும் நகரக்கூடாது ஆமா


 

இரண்டுமுறை நேரில் சந்தித்து இருக்கிறேன்

இருபதில் இருந்து இருபத்தி ஐந்துமுறை அலைபேசியில் பேசியிருப்பேன்

கொரோனா முடிந்து பள்ளிகள் திறக்கவிருந்த நேரம் இந்த சூழலில் பள்ளிகள் எப்படி செயல்படுவது அவசியம் என்று ஒரு கட்டுரை வேண்டும் என்று செம்மலர் சார்பாக தோழர் Kumaresan Asak கேட்கிறார்

“காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தருகிறேன்

ஜூன் 2021 செம்மலரில் வருகிறது

ஜூன் இரண்டாம் வாரத்தில் ஒருநாள் அழைக்கிறார்

அந்தக் கட்டுரை குறித்து அவ்வளவு பேசுகிறார். வழக்கமாக எல்லோரையும் போலவே ”இவ்வளவ வச்சிக்கிட்டு ஏன் இப்படி ஒதுங்கிக் கிடக்க வேண்டும்” என்கிறார்

பதில் சொல்கிறேன்

காதுகொடுத்து கேட்கிறார்

பிறகு பொண்ணு த. ஜீவலட்சுமி செம்மலருக்காக கட்டுரை கேட்க அது அச்சில் வந்தபோதும் அழைத்து பேசுகிறார்

சரியாகும் எட்வின் என்கிறார்

கட்சியின் மாவட்டக்குழுவிற்கு நான் தேர்வானதும் முதலில் தமிழுக்கும் பிறகு ஆதவனுக்கும் மூன்றாவதாக நாதனுக்கும்தான் சொல்கிறேன்

”அப்பா, எவ்வளவு போராட்டம். தமுஎச பொறுப்ப எடுங்க. கோபமெல்லாம் வேண்டாம்” என்கிறார்

இதே அறிவுரையைத்தான் தோழர் தமிழும் சொல்லியிருந்தார்

எடுத்ததும் சொல்கிறேன்

அப்படி மகிழ்கிறார்

இடையில் அவரது சிறுகதை தொகுப்பு குறித்து எழுதுகிறேன்

நெகிழ்ந்கிறார்

பெரம்பலூர் இருமுறை எனக்குத் தெரிய வந்திருக்கிறார். வீடு வரவில்லை. கோபப்பட்டபோது அடுத்தமுறை வருவதாக சொல்கிறார்

என்னிடம் வாக்குத்தவறியவர்களின் பட்டியலில் நாதனும் இப்போது

போய் வாங்க நாதன்எல்லோருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்

சத்தியமாக முடியவில்லை

நான் போகும்வரை யாரும் நகரக்கூடாது ஆமா

Monday, March 17, 2025

பிள்ளை தரப்போகும் தேநீருக்கான தாகம்

 15.03.2025 அன்று பெரம்பலூரில், “இடது விழிவழி வைக்கம் 100” என்ற தலைப்பில் தீக்கதிர் வாசக வட்டத்தில் உரையாற்றியது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது

வெளியே வந்ததும் மருத்துவர் கருணாகரன் இடுப்பை அணைத்து இறுக்கி கன்னத்தைத் தட்டிவிட்டு சென்றார்
பிள்ளை அம்பேத் கோகுல் அதேபோல் குனிந்து இடுப்பை அணைத்து சிரித்துவிட்டு சென்றான். அவன் உயரத்திற்கு குனிந்தால்தான் நம்ம இடுப்பு கிடைக்கும்.
அடுத்தநாள் காலை அழைத்த கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கிருஷ்ணசாமி உரைகுறித்து அரைமணி நேரம் பேசினார்
இத்தனை ஆண்டுகளில் அவர் என்னை அழைத்துப் பேசுவது இது இரண்டாவது முறை
இவை எல்லாம் இப்படி இருக்க,
எங்கள் கூட்டங்களில் ஆர்வமாக பங்கேற்கும் எங்கள் மாவட்டச் செயலாளர் தோழர் Ramesh Perumaldyfiயின் இளைய மகள் (அவரது இரண்டு மகள்களின் பெயர்களில் குழம்பிக் கிடப்பதால் தவறாக சொல்லி பிள்ளைகளிடம் திட்டு வாங்க விருப்பம் இல்லை) வெளியே வந்து கேட்டாள்
”பேச்செல்லாம் செமையா புரிஞ்சுது. ஆனா ஒன்னே ஒன்னுதான் புரியவே இல்ல. ஆமா வைக்கம் வைக்கம்னீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?”
அவள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி இருக்கிறாள்
வைக்கம் என்றால் கேரளாவில் உள்ள ஊர் என்றதும்
”இப்ப புரியுது, கேரளாவில் வைக்கம் ஒரு ஊர். அந்த ஊர்ல இந்தப் பிரச்சினை. “ என்கிறாள்.
குழந்தைகளும் வருவார்கள். அவர்களையும் மனதில் கொண்டு பேச வேண்டும் என்பது அன்றைய கூட்டத்தின் பாடம்
இன்னொரு விஷயம் என்னவெனில் அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்த எங்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் அகஸ்டின் அவர்களின் குழந்தையின் தோழமை
அவளும் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதியிருக்கிறாள்
”அங்கிள் வீட்டுக்கு வாங்க, டீ போட்டுத் தாரேன்” என்றாள்
பிள்ளை தரப்போகும் தேநீருக்கான தாகம் தொடங்கி இருக்கிறது

17.03.2025

Sunday, March 16, 2025

இந்தக் குட்டிப் பெண்ணை தாயென்று சொல்லாமல்

பாரதிதாசனுக்கு பெரியார் மணியம்மை திருமணத்தில் உடன்பாடில்லை.

விமர்சனம் செய்தபடியேயும், மணியம்மையாரைத் திட்டியபடியேயும்தான் இருந்தார் அவர்.
ஆனால் அவரே ஒருமுறை, “இந்தக் குட்டிப் பெண்ணை தாயென்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது” என்று கேட்டார்.
அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பது கீழ்வருவதை படித்தால் புரியும்.
தந்தை பெரியாரின் பெயரில் திருச்சியில் உள்ள ”பெரியார் ஈ.வெ.ரா” கல்லூரி ஏராளமான சமூகப் போராளிகளை உருவாக்கிய கல்லூரி.
அந்தக் கல்லூரிக்கு இடமும் ஓரளவு பொருளும் கொடுத்தது தந்தை பெரியார் என்று தெரியும்.
அந்த இடம் அவரது பூர்வீக சொத்து என்றுதான் நான் நினைத்திருந்தேன்.
02.03.1974 அன்று அந்தக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் ஆற்றிய உரையின் சுருக்கத்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள ”அன்னை மணியம்மையாரின் சிந்தனை முத்துக்கள்” என்ற நூலில் வாசித்தபோது வேறு ஒரு உண்மை புரிந்தது.
அந்த இடம் தந்தை பெரியாரின் பூர்வீக சொத்தல்ல. அன்னையின் வற்புறுத்ததலால் பெரியாரால் வாங்கப்பட்ட இடம் அது.
அன்னையார்தான் அந்த இடத்தை வாங்குவதற்காக பெரியாரை அழைத்து வந்திருக்கிறார்கள்.
அது காட்டுப்பகுதியாக இருந்ததால் அதை வாங்கும் எண்ணம் பெரியாருக்கு இல்லை.
அன்னைதான் பிடிவாதமாக நிற்கிறார்கள்.
”இங்கு வீடு கட்டி குடியிருக்க ஆசைப்படுகிறாயா ?” என்று கேட்கிறார் பெரியார்
இல்லை
பிறகு எதற்கு? எனக் கேட்கிறார்
அம்மாவோ இன்னும் பிடிவாதமாக நிற்கிறார்.
வாங்குகிறார்கள்.
ஒரு நாள் அந்த இடத்தில் பெண்குழந்தைகளுக்கு ஒரு கல்லூரி கட்டினால் என்ன என்று கேட்கிறார் அம்மா.
சரி என்கிறார்.
உடனே இருவரும் ஈரோட்டில் உள்ள “சிக்கைய நாயக்கர்” கல்லூரிக்கு போகிறார்கள்
அங்குள்ள ஆய்வகங்கள், கருவிகள், தளவாடங்கள் அனைத்தையும் பார்த்த பெரியார்,
இவ்வளவும் வாங்க நம்மிடம் உள்ள காசு போதாதே என்கிறார். இருவரும் யோசிக்கிறார்கள். இடத்தையும் முடிந்த காசையும் அரசிடம் கொடுத்து கல்லூரி கட்ட சொல்லலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
அன்றைய முதல்வர் பக்தவச்சலம் சம்மதிக்கிறார்.
இப்படியாகத்தான் திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி வருகிறது.
02.03.1974 அந்தக் கல்லூரி விழாவிற்கு வந்த அன்னை குழந்தைகள் தேவையில்லாததற்கெல்லாம் போராட்டங்களில் ஈடுபட்டு படிப்பை வீணாக்குகிறார்கள் என்ற செய்தி கேட்டு பெரியார் கவலையோடே இருந்ததாக சொல்கிறார்.
இதன் பொருள் சமூகக் காரணங்களுக்காக போராடக்கூடாது என்பதல்ல என்பதையும் சொல்கிறார்.
அந்தத் தாயார் மரணமடைந்த தினம் இது.
வணக்கம் தாயே

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...