திருமதி பிரேமலதா மற்றும் சதீஷ் போன்றோரை நெறிப்படுத்தவேண்டிய தங்களது பொறுப்பினை மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் தட்டிக் கழிக்கக் கூடாது என்று தோன்றுகிறது.
திரு விஜயகாந்த் என்பவர் தனது ஓட்டுவங்கியைத் தவிர வேறு எந்த விதத்திலும் மக்கள்நலக் கூட்டணியின் தலைவர்களைவிட உயர்ந்தவரல்ல. அல்லது இப்படி வேண்டுமானால் சொல்கிறேன் மக்கள் நலக் கூட்டணித் தலைவரில் எவரும் அவரைவிட தியாகத்திலோ செயல்பாட்டிலோ அறிவிலோ குறைந்தவர்கள் அல்ல.
அதிலும் குறிப்பாக திருமதி பிரேமலதா அவர்களின் உரைகளை நெறிப்படுத்துதல் அவசியம். ஏதோ விஜயகாந்த் அவர்கள் அவதாரப் புருஷர் என்ற கணக்கில் நீளும் அவரது உரை தற்செயலானது என்று தோன்றவில்லை.
செயல்திட்டமே அனைத்தைம் வழிநடத்தும் என்பதை தயவுசெய்து புரிய வையுங்கள்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்