பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அஷோக் மோச்சியின் கண்களில் கொலை வெறிக் கொடூரத்தையும் கொலை வாள் கொடுத்து அவரது கரங்களை வெறிகொண்டு இயங்க வைத்த மதவெறி சக்திகள் குத்புதீன் அன்சாரியின் கண்ககளில் மிரட்சியையும் கூப்பிய அவரது கரங்களுள் உயிருக்கான யாசித்தலையும் விதைத்தன.
இத்தனையாண்டு கால போராட்டங்களுக்குப் பின்னால் அன்சாரியையும் அஷோக்கையும் பூங்கொத்தோடு ஒருவரையொருவர் அன்போடு அரவணைக்க வைத்தனர் இடதுசாரிகள்.
இதை நெகிழ்ச்சியோடு சொன்னபோது என்ன செய்தாலும் அவர்களுக்கு ஒரு ஓட்டும் கூடுதலாகக் கிடைத்துவிடாது என்று சக ஆசிரியர் ஒருவர் சொன்னார்.
எதையும் தேர்தலோடும் வாக்குகளோடும் மட்டுமே பொறுத்திப் பார்க்கும் இந்த சமூகத்தை குழந்தைகளும் குயில்களும் சபிக்கட்டும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்