Friday, March 18, 2016

வலிமறக்கவே குடித்திருந்தாலும்

அரியலூர் அருகே உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் போதையோடு பள்ளிக்கு வந்து வகுப்பறையில் தடுமாறி விழுந்திருக்கிறார்.
பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் விசாரனை நடத்தப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அவரது தண்டனை குறித்து கருத்தெதுவும் நமக்கில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒரு ஆசிரியர் போதையோடு பள்ளிக்கு வருவது ஆகப்பெரிய தவறு. அதுவம் ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய தலைமை ஆசிரியர் போதையோடு பள்ளிக்கு வருவதென்பது எந்தக் கோடூர வடிவத்தையும் மீறித்தான் திமிறும் குற்றம். அதற்கு இந்த தண்டனையே போதாது என்பதே நமது கருத்து.
கடுமையான கால்வலி என்றும் இன்னொரு ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதாலும் அருகில் உள்ள பள்ளிகளிலும் ஒரே ஆசிரியரே இருப்பதால் மாற்று ஆசிரியர் இல்லை எனவும், அதனால் விடுப்பெடுக்க இயலவில்லை என்றும் கூறியுள்ளார். அதன் காரணமாக வலி மறக்கவே குடித்ததாகவும் கூறியுள்ளார்.
குடித்ததற்கான காரணத்தை நிராகரிக்கிறோம். தரப்பட்ட தண்டனை குறைவுதானென்பதில் தெளிவாயிருக்கிறோம்.
ஆனால் ஓராசியர் பள்ளிகளிலோ அல்லது காலியிடம் நிரப்பப் படாமல் உள்ளதால் ஒரு ஆசிரியர் மட்டுமோ பணிபுரியும் பள்ளிகளிலோ எந்த முக்கியமான காரணத்தின் பொருட்டும், கடுமையாக உடல்நலம் பாதிக்கப் பட்டபோதும் விடுப்பெடுக்க முடியாத ஆசிரியர்களின் சிரமத்தை அவசியம் பரிசீலிக்க வேண்டும்.
இதற்குப் பிறகும் மதுவை ஒழிப்பதில் பிரச்சினைகள் உண்டு என்று பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...