Monday, March 14, 2016

தெம்பற்றுப் போச்சு



தாங்க முடியாத முதுகுவலியோடு மருத்துவரை பார்த்தபோது சர்க்கரையின் அளவு கோமாவை கொண்டுவருமளவு இருந்தது.
வண்டியில் வந்ததற்கே ஆச்சரியப்பட்டாரே மருத்துவர்

அன்று போய் தொலைத்திருககலாம்.

பள்ளியில் கீழே விழுந்தபோது சக தோழர் அன்பழகன் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனை போனபோது சர்க்கரை அளவுக்கு அதிகமாக குறைந்து போயிருந்ததே

அன்றேனும் போய்த் தொலைத்திருக்கலாம்.

சாலையைக் கடந்துகொண்டிருந்தபோது கண்களைக் கட்டிக்கொள்ள தடுமாறியபோது 'சாவுக்கிறாக்கி' என்று திட்டிக்கொண்டே போனார்களே

அன்றைக்கேனும் எதிலாவது அடிபட்டு போய் தொலைத்திருக்கலாம்

இதையெல்லாம் சகிப்பதற்கு உடலிலும் மனதிலும் தெம்பில்லை

பெரம்பலூரில் யார் எதிர்ப்பியக்கம் நடத்தினாலும் சொல்லுங்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...