அடிக்கடி எனக்கு நிகழ்வதுதான்.
அவரை 1987இல் இருந்து எனக்கு தெரியும். அப்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த கல்விநிலைத்தை விட்டு வெளியேறும்போது அந்த நிறுவனத்தின் தாளாளர் ஒரு நல்ல ஆசிரியரைத் தேடித் தருமாறு கேட்டுக் கொள்ளவே தேடியதில் கிடைத்தவர். அப்போது முதல் நல்ல பழக்கம். எப்போது எங்கு பார்த்தாலும் எவ்வளவு வேலை இருந்தாலும் கொஞ்ச நேரமாவது பேசிவிட்டுதான் நகர்வோம்.
இப்போது அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.
அண்ணே, அண்ணே அன்று அன்பு கசிய அழைத்துப் பேசுவார். இதுவரை என்னை இத்தனைமுறை என் தம்பிகூட அண்ணே என்று அழைத்திருக்க மாட்டான்.
இன்று காலை ATM இல் அவரைப் பார்க்க நேர்ந்தது. அவருடைய பையனது படிப்பு பற்றி, கிஷோர் பற்றி என்று நகர்ந்தது பேச்சு. பேச்சு வாக்கில் கேட்டார். ஏங்கண்ணே 15 ஆ 16 ஆ ரிட்டயர்மெண்ட். பென்ஷன் பேப்பரெல்லாம் போயிடுச்சா?
22 இல்தானே ஓய்வு என்றதும் அதிர்ந்து போய்விட்டார்.
அவர் 17 இல் ஓய்வு பெறுகிறார் என்ற செய்தியும் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தம்பி அண்ணனானார்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்