அநேகமாக அறிவாலயத்துச் சுற்றுச் சுவர் கேட்டை நெருங்கிவிட்டார் திரு விஜயகாந்த் என்றே படுகிறது. என்னைப் போன்றவர்களுக்கு அவரைஇந்த அளவிற்கு வலியப் பிடித்துத் தொங்கியிருக்கவேண்டாம் என்றுதான் படுகிறது. என்றாலும் களத்தில் இருக்கும் ஊழியர்களே இது குறித்து முடிவெடுக்கும் தகுதி பெற்றவர்கள் என்பதால் நம் கருத்து இது என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணித்தோழர்களிடம் நமது கோரிக்கை ஒன்று உண்டு.
தேர்தலுக்கு வெகு முன்னரே, தொகுதிப் பங்கீடுகூட முடியாத நிலையிலும் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு தேர்தலை ஒரு இயக்கமாக மாற்றிய உங்களை மரியாதையோடே பார்க்கிறேன்.
எனது கோரிக்கை இதுதான்,
திரு.விஜயகாந்த் உங்களோடு இணையாத பட்சத்தில் அவர் குறித்த விமர்சனங்களை தவிர்த்து களம் காணுங்கள்.. அவரது கூட்டணி நிலைபாடு குறித்துமட்டுமே விமர்சியுங்கள். அது விடுத்து அவரைப் பற்றி அனைத்தையும் பேசுவதென்பது அவர் ஒருக்கால் உங்களோடு சேர்ந்திருந்தால் சரியாகிப் போயிருக்குமா என்ற கேள்விக்கு இடமளிக்கலாம்.

No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்