Thursday, March 3, 2016

சிங்கத்தை அதன் குகையிலேயே


ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டு பட்டிருந்த காலத்தில் மாணவர் தலைவராக இருந்தவர் மார்க்சிஸ்ட் பொதுஉடைமைக் கட்சியின் இன்றைய பொதுச் செயலாளரான தோழர் யெச்சூரி.

ஏதோ பிஜேபிக்காரர்கள்தான் இப்படி என்று இல்லை.  காங்கிரஸ் காலத்திலும் இதைவிடவும் மிகக் கொடூரமான தாக்குதல்களைத்தான் மாணவர்கள் அனுபவித்திருக்கிறார்கள். தலைமறைவாய் இருந்தபடிதான் சங்கவேலைகளை யெச்சுரி கவனித்ததாய் தோழர் ஷியாமளன் காஷ்யபன் கூறுகிறார்.

தலைமறைவாய் இருந்தபடிதான் படிக்கவும் முடிந்திருக்கிறது காங்கிரஸ் காலத்தில் என்றும் கொள்ளவேண்டி இருக்கிறது.

எதையும் எதிர்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான சக்தியையும் யுக்தியையும் இவர்களது மக்களுக்கான அரசியல் இவர்களுக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தைப் பார்க்கும்பொழுது இந்திரா அம்மையாரிடம் ஏதோ கோரிக்கைகளை வைப்பது போன்றோரின் அல்லது அவரது தலைமையில் நடந்துகொண்டிருக்கும் கூட்டம் போன்றோரின் தோன்றும்.

அன்றைய ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வேந்தரான  இந்திரா அம்மையார் பதவி விலகவேண்டும் என்பதற்காக அம்மையாரின் வீட்டு வாசலில் நடந்த ஆர்ப்பாட்டம் இது.

மாணவர்களை புன்னகையோடு சந்திக்கவந்த அம்மையார் கடுகடுத்த முகத்தோடு உள்ளே திரும்பியிருக்கிறார்.

அடுத்த நாளே பதவி விலகியிருக்கிறார்.

யெச்சூரி அனறு வென்றார்.

எங்கள் பிள்ளை கன்ஹையா நாளை வெல்வான்

4 comments:

  1. தாம் பதவி விலகக் கோரிய தலைவரின் வீட்டின்முன்பே போராட்டம் நடத்த முடிந்திருக்கிறது அன்று. இன்று, நீதிமன்றத்துக்குக்கூட செல்ல முடியவில்லை!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. முகநூலில் இப்பதிவைப் படித்த நினைவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க தோழர் மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...