சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் நண்பர்களின் பிள்ளைகள் மற்றும் நண்பர்களது நண்பர்களின் பிள்ளைகள் என்று நான்கு பேர் சாலை விபத்தில் இறந்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களில் எதிர் வந்த இரு சக்ககர வாகனங்களோடு நேருக்கு நேர் மோதி இறந்திருக்கிறார்கள்.
அனைத்து விபத்துக்களுமே பெருநகரங்களில்தான் நிகழ்ந்துள்ளன. போவதற்கும் வருவதற்கும் தனித்தனியாக பாதைகள் உள்ளபோது ஏனிப்படி?
கொஞ்ச தூரம் போய் முறையாக யூ டர்ன் எடுத்து திரும்புவதற்கு சோம்பேறித்தனம் கொள்வதாலேயே இது மாதிரியான விபத்துக்கள் நிகழ்கின்றன.
போக, அதிக வேகம், மூன்று பேர் நான்கு பேர் போவது, கவனத்தை சாலையில் வைக்காமல் அலட்சியமாக போவது என்பது மாதிரியும் காரணங்கள் நீளும்.
பிள்ளைகளை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். நீங்கள் போன பிறகு நாங்கள் வாழ்வது இருக்கிறதே, அது எந்தக் கொடுமையினும், ஏன் முதியோர் இல்ல வாழ்க்கையைவிட கூடுதலான கொடுமை. அத்தகைய தண்டனையை எங்களுக்குத் தராதீர்கள்.
பிள்ளைகள் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். காவல்துறையும் இதில் கடுமை காட்ட வேண்டும்.
எந்த சோகத்தினும் புத்திர சோகம் கொடுமையானது.

No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்