நிர்ப்பந்தங்கள் எல்லாத் தருணங்களிலும் மோசமானவை அல்ல. சில நிர்ப்பந்தங்கள் மகிழ்ந்து வரவேற்கத் தக்கவையே.
உலகிற்கே நல்லது தரக்கூடிய என்றெல்லாம் கூறமுடியாதுதான். ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு நாட்டு மக்களும் பெரிதாய் மகிழ்வதற்குரிய வாய்ப்பைத் தந்துள்ள ஒரு நிர்ப்பந்தம்.
தொடர்ந்து சரிந்துவரும் அமெரிக்க பொருளாதாரம் கியூபாவுடனான தனது மறுபரிசீலனை செய்யவேண்டிய நிர்ப்ந்தத்தை அதிபர் ஒபாமாவிற்கு வழங்கியது.
விளைவாக, 88 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபா வ சென்றிருக்கிறார்.
நன்றி ஒபாமா.
உங்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளின்மீதான அமெரிக்காவின் அனுகுமுறையை மறு பரிசீலனை செய்யவேண்டிய சரியான தருணமிது
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதே நேரத்தில் தனது கட்டமைப்பை ஒருபோதும் கியூபா மாற்றிக் கொள்ளாது என்று ரால் கூறியுள்ளார்.
மகிழ்ச்சி ரால்.
நல்லது நடக்கட்டும்.
இருநாட்டு மக்களும் மகிழ்ந்து உறவாடி மகிழட்டும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்