Saturday, March 5, 2016

நானும் அந்தக் குழந்தையும்

பேருந்தில் இருவர் உட்காரும் இருக்கையில் ஜன்னலோரத்தில் ஒரு இடம் இருந்தது. இந்தப் பக்கம் ஒரு பள்ளிக் குழந்தை அமர்ந்திருந்தாள்.
என்னைப் பார்த்ததும் உள்ளே போவதற்காக ஒதுங்கி வழி விட்டாள்.

“கொஞ்சம் உள்ள போடா”

“நீங்க உள்ள போங்க”

“உள்ள கால மடக்கி உட்கார முடியாதுடா. வலிக்கும்.”

விருப்பமில்லாமல் நகர்ந்து இடம் கொடுத்தாள்.

பேசாமல் விட்டிருக்கலாம். அவள் முகம் சுளித்தது என்னவோ செய்யவே சன்னமாய் புலம்பினேன்,

“ வயசானவங்க கொஞ்சம் நிம்மதியா உட்காரட்டுமே என்று சின்னதுங்க நினைக்க மாட்டேங்குதுங்க”

கேட்டுவிட்டது போலும். புன்னகையோடு சொன்னாள்,

“சிறுசுங்க நிம்மதியா உட்காரட்டுமேன்னு வர வர பெருசுங்க நினைக்க மாட்டேங்கறாங்க”

அவளைப் பார்த்தேன்.

சிரித்தாள்.

நானும் சிரித்தேன்.

கொஞ்ச நேரம் ஆயிற்று இருவரும் சிரிப்பை நிப்பாட்ட.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...