Friday, April 1, 2016

ஜியார்டனோ என்ற நாத்திகன்




இயேசுவின் பிறப்பு குறித்த திருச்சபையின் அல்லது வேதபுத்தகத்தில் உள்ள யாவும் புனைவு என கூறினார் ஜியார்டானோ புருனோ. வேதப் புத்தகம் என்பது பொய்களாலும் புனைவுகளாலும் நெய்யப்பட்ட ஒரு புத்தகம் அவ்வளவுதான் என்று கூறினார். பைபிள் என்பது கடவுளின் வார்த்தைகளால் எழுதப்பட்டது அல்ல, காரணம் கடவுள் என்ற ஒருவரே இல்லை என்று அவர் கூறினார்.

பையப் பைய மக்கள் காது கொடுத்து அவரை கேட்க ஆரம்பித்தார்கள்.  1590 களில் இது அதிசயம். முக்கால்வாசி நாடுகளின் மகாராஜாக்கள் போப் அவர்களின் ஆளுகைக்கு கட்டுப் பட்டிருந்த நேரம் அது. பச்சையாய் சொல்வதெனில் போப் என்பவர் அரசர்களுக்கெல்லாம் அரசராக இருந்தார். இன்னும் சொல்லப் போனால் அவர் போப்பரசர் என்றே அழைக்கப் பட்டார்.

வேதப் புத்தகமே அநேகமாக சட்டப் புத்தகமாக இருந்தது. வேதப் புத்தகத்தையோ போப்பரசரின் ஆளுகையையோ கேள்வி கேட்க யாரையும் திருச்சபை அனுமதித்ததே இல்லை. இன்றும் நிலைமை அதுதான். கேள்வி கேட்டால்  வெறும் நம்பிக்கையால் மட்டுமே கட்டமைக்கப் பட்டுள்ள திருச்சபையின் அஸ்தீவாரம் ஆட்டம் கண்டுவிடும் என்பது திருச்சபைக்கு நன்கு தெரிந்தே இருந்தது.

திருச்சபை ஆட்டம் கண்டால் தங்களது சுகபோக வாழ்வு முடிவுக்கு வந்துவிடும். பிறகு தங்கள் உணவிற்காகக்கூட தாங்கள் உழைக்க நேரிடும் என்பதை புரிந்தே வைத்திருந்தது திருச்சபை.

எனவே யார் இதற்கு எதிராக சிறிய அளவிலான அசைவைக் கொடுத்தாலும் திருச்சபை அவர்களுக்கு பகிரங்கமான தண்டனை கொடுத்தது. இதன்மூலம் ஒரு அச்ச உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி யாரும் திருச்சபைக்கு எதிராகத் திரும்பிவிடாமல் அது பார்த்துக் கொண்டது.

இந்த நேரத்தில்தான் அறிவியல்பூர்வமான கருத்துக்களை ஜியார்டானோ மக்களிடம் விதைத்து வந்தார். அறிவு கொண்டு எதையும் அளவிட மக்களை அவர் கேட்டுக் கொண்டார். ஏசுநாதரின் அதிசயங்களை அவர் பகடி கலந்த குரலில் கேள்வி கேட்டார்.

வழக்கமாக திருப்பலியின்போது கொடுக்கப்படும் அப்பம் மற்றும் வைன் குறித்தும் கருத்து சொன்னார். அப்பத்தை தரும்போது சாமியார் ‘இது இயேசுவின் மாமிசம்’ என்றும் வைன் கொடுக்கும்போது ‘இது இயேசுவின் ரத்தம்’ என்றும் கூறுவர். இதை பகடியோடு மறுத்தார்.

அறிவு மதத்தையும் தங்களது ஆடம்பர வாழ்க்கையையும் அழித்துப் போடும் என்பதை உணர்ந்திருந்த திருச்சபை அவரை கைது செய்தது.

மன்னிப்புக் கேட்டு விசுவாசத்திற்கு திரும்பினால் அவரை மன்னித்துவிடுவதாக திருச்சபை கூறியது. உறுதியாய் கியடானோ மறுக்கவே 1600 ஆம் ஆண்டு அவர் வாடிகன் நகரத்து தெரு ஒன்றில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.

நாத்திகமும் பகுத்தறிவும் அந்த ஜுவாலையில் இருந்து கங்கெடுத்துக் கொண்டது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...