Sunday, April 3, 2016

எதுனா என்ன எல்லாம் ஒன்னுதானே அண்ணா

ஜோடி குரூசின் “அஸ்தினாபுரம்” நாவல் வெளியீட்டு விழாவிற்காக சென்றுகொண்டிருந்தேன். எனக்கு அடுத்ததாக ஒரு சிறுவன், அவனை ஒட்டி ஜன்னல் ஓரத்தில் அவனது அம்மா. கூலித் தொழிலாளி என்பது அவரது உடையிலிருந்தும் அவர்களது உரையாடலில் இருந்தும் தெரிந்தது.
அம்மாவும் பிள்ளையும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எதை எதையோ பேசுகிறார்கள். அம்மாவிற்கும் பிள்ளைக்குமிடையேயான அன்பு கலந்த உரையாடலில் கரைந்து போகிறேன்.


சாலையோரமாக ஒரு கெபியைப் பார்த்ததும் அதைக்காட்டி பையனிடம் ,” தம்பி, இந்த மாதா சாதாரன மாதா இல்லடா. ரொம்ப பவரு. அழுது சொன்னோம்னா காது கொடுத்து கேட்டுட்டு செய்யும்”
பையன் சிரித்துக் கொண்டான்.


அச்சரபாக்கம் அருகே மலைமீது உள்ள சிவன் கோவிலைப் பார்த்ததும், “ தம்பி இது சாதாரண சிவன் இல்லடா. சக்தி வாய்ந்த சிவன். நம்ம எதிரிய இல்லாம செஞ்சுடுவாரு”
இப்பவும் பையன் சிரிக்கிறான்.
“இது ராமர் கோவிலாச்சேம்மா” என்கிறேன்.
“அப்படியா” என்றவர் அடுத்தநொடியே ,” எதுனா என்ன எல்லாம் ஒன்னுதானே அண்ணா”
நானும் சிரிக்கவே “ என்னண்ணா நீங்களும் இந்தக் கருவாயனோட சேந்து கிண்டல் பன்றீங்களா”
அய்யோ பாவிகளா எங்களை இப்படியே இயல்பாய் விட்டு விடுங்களேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...