Thursday, June 16, 2022

நூபுர்ஷாவின் கருத்து இந்துக்களின் கருத்தல்ல

 நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களின்போது கவச உடையில் காவலர்கள் செல்ல வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் வலியிறுத்தி உள்ளதாக 12.06.2022 நாளிட்ட “தமிழ் இந்து” கூறுகிறது

இதன் பொருள் என்ன என்பது தெரியவில்லை
அந்தக் கருத்துக்கு எதிராகப் போராடுபவர்களை நொறுக்குங்கள் என்பதாக இந்த வலியுறுத்தலைக் கொள்வதா
எனில்,
அவரது கருத்தை அரசு ஏற்கிறதா?
ஏற்கிறது என்றால் அவரை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள்
அவரைக் கட்சியில் இருந்து நீக்கியது என்பது ஒருவகையில் நூபுரின் கருத்திற்கான எதிர்வினைதானே
கட்சியின் எதிர்வினை என்பது அவரை கட்சியைவிட்டு வெளியேற்றுவது எனில்
தெருவில் வந்து போராடுவதுதானே மக்களுக்கான எதிர்வினைக்கான வாய்ப்பு
அதுபோக
ஏன் அவர்மீது இன்னும் FIR இல்லை
இவை எல்லாம் ஒருபுறம்
இன்னொருபுறம்
அல்கொய்தா இதற்கான எதிர்வினையாற்றுவது
இத்தனை முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது
அவர்களது பாதுக்காப்பு கேள்விக்கு உள்ளானபோது
அவர்களது குடியுரிமை கேள்விக்கு உள்ளானபோது
வராத அல்கொய்தா
நூபுர்ஷாவின் கருத்தால் பிஜேபி க்கு பின்னடைவு வருகின்றபோது சரியாக உள்நுழைய முயற்சிப்பது
பாஜக விற்கு ஆதரவான நடவடிக்கை என்பதையும்
நூபுர்ஷாவின் கருத்து இந்துக்களின் கருத்தல்ல
அது,
பாஜகவின் RSS இன் கருத்து என்பதையும்
இந்துக்களின் அன்பும் ஆதரவும் அரவணைப்பும்
தங்களோடு இணைந்த அவர்களது களப்போராட்டமும் மட்டுமே தங்களுக்கான உரிமையைக் காக்கும் என்பதும்
இந்திய இஸ்லாமியத் தோழர்களுக்குத் தெரியும்
#சாமங்கவிய 44நிமிடங்கள்
12.06.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...