தானொரு இஸ்லாமியன்
எனவே
தனது கடை இடிக்கப்படலாமென்ற அச்சத்தில்
தனது கடையில் உள்ள சரக்குகளை குடும்பத்தோடு அட்டைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருக்கிறார்
பத்திரப்படுத்த
அந்த வீடியோ அதைமட்டுமே காட்சிப் படுத்தியிருப்பின்
அழுதுகொண்டே தூங்கியிருக்கக் கூடும் நான்
பக்கத்துக் கடைக்காரர் எந்தச் சலனமும் இன்றி
கட்டிய கைகளோடு
ரோட்டைக் கடந்துபோகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்ப்பதுபோல அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது
குறைந்தபட்சம்
அந்த சரக்குகளை பத்திரப் படுத்துவதிலாவது உதவி இருக்கலாம்
கலங்கிய கண்களோடு நின்றிருக்கலாம்
ஆத்திரமாக இருக்கிறது
எப்படித் தூங்குவது?
முகநூல்
13.06.2022
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்