திரு அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து பத்திரிக்கையாளார்களை மிரட்டும் தொனியிலும் அவமரியாதை செய்யும் விதமாகவும் நடந்துகொள்வதைத் தொடர்ந்து
ஊடகவியலாளர்கள் ஏன் திரு அண்ணாமலையைப் புறக்கணிக்கக் கூடாது என்று நாம் கேட்கிறோம்
இதில் ஒரு நியாயம் இருக்கிறது
ஆனால்,
ஊடக வெளிச்சம் மட்டுமே ஊதிப் பெரிதாக்கிய அண்ணாமலை அவர்களும்
வேண்டுமானால் என்னைப் புறக்கணித்துக் கொள்ளுங்கள் என்று உடக நண்பர்களிடம் கூறுகிறார்
இது
ஆதிக்க மனநிலையின் உச்சம்
அவருக்குத் தெரியும் மெயின்ஸ்ட்ரீம் ஊடக நண்பர்களால் அவரைப் புறக்கணிக்க முடியாது என்பது
மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தைத் தீர்மானிக்கிற இடத்தில் இருப்பது
அவற்றின் முதலாளிகள்
ஊடகங்களில் பணியாற்றும் நண்பர்களல்ல
ஊடக முதலாளிகளை அவர்களால்
வாங்கவும் முடியும்
வாடகைக்கு எடுக்கவும் முடியும்
சமூக வலைதளங்களை
குறிப்பாக யூ ட்யூப் சேனல்களை
இன்னும் இன்னுமாய் வலுவாக்குவதும்
மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் மட்டுமே இதற்கு மாற்றாக முடியும்
முகநூல்
30.05.2022
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்