Thursday, June 9, 2022

நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்

 சிறுவாச்சூருக்கும் நம் வீட்டிற்குமான இடைவெளி 9 கிலோமீட்டர்

ஏறத்தாழ 34 ஆண்டுகளாக சிறுவாச்சூரைக் கடந்துதான் பள்ளிக்குப் போகிறேன்
பள்ளி முடிந்து சிறுவாச்சூர் வழியாகத்தான் வீடு வருகிறேன்
சிறுவாச்சூர் கோவில் புகழ்பெற்ற கோவில்
மிகவும் பிரபலமான கோவில்
இப்போது சிறுவாச்சூர் தமிழ்நாட்டின் பேசப்படக்கூடிய ஊராக மாறி இருக்கிறது
இதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறக் கடமைபட்டிருக்கிறேன்
நாத்திகனான நான் இரண்டுமுறை அந்தக் கோவிலுக்கு சென்றிருக்கிறேன்
அது தனியார் கோவில்
எனக்கு அந்தக் கோவிலின்மீது மிகப்பெரும் மரியாதையும் ஈர்ப்பும் உண்டு
இந்தக் கோவிலில் பார்ப்பனர்கள் தட்டை நீட்ட நம்ம ஆள் தேங்காய் உடைத்து விபூதி தருவார்கள் என்று கேள்விப்பட்டிருப்பதே இதற்கான காரணம்
இந்தக் கோவிலின் சிலையும் உடைக்கப்பட்டு
அதன் காரணமாக எழுந்துள்ள ஊழல், இறை அவமதிப்பு எல்லாம் கடந்து என்னை கேள்விபட்ட நாளில் இருந்து கிழித்துப் போட்டது
தாயா புள்ளையா காலங்காலமாக வாழ்ந்துவரும் எம் மாவட்ட மக்களை பாவிகள் கூறு கூறாக சிதைத்து விடுவார்களோ என்ற அச்சம்
அப்படி எல்லாம் நடக்காது
அந்த பந்தம் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்
அந்த நம்பிக்கையைத் தந்திருப்பவர்கள்
யூ ட்யூப் சேனல் பிள்ளைகள்
அவர்கள் மட்டும் இல்லை என்றால் அந்த ஆபத்து நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இல்லை என்று மறுக்க முடியாது
தோழர் சவுக்கு சங்கர் தலையிட தமிழ் மிண்ட் கரிகாலன் களமிறங்கி உள்ளதை உள்ளபடி அம்பலப்படுத்த
நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்
பேரலை யூ ட்யூப் சேனலில் சிறுவாச்சூர் குறித்த பிள்ளை மில்டனோடான நேர்காணலின் இறுதியில் பிள்ளை கரிகாலன் (Karikalan Kiru)
மத மோதலை உருவாக்குவதற்காக நடந்தவற்றை கூர்மையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று சொன்னது
சொன்னதைவிட அதை சொன்ன டோன் மிக முக்கியம்
இந்த சின்ன வயதில் இந்தப் பிள்ளைக்கு இருக்கும் இந்த பக்குவத்தையும், மனித நேயத்தையும், வித்தியாசங்கள் மீதான மரியாதையையும்
இயற்கை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று இறைஞ்சுகிறேன்
தோழர் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் இருவரையும்
மில்டன், கரிகாலன், தமிழ் மிண்ட்டில் இருக்கும் அந்தக் குட்டிப் பாப்பாவையும்
இறுகப் பற்றிக் கொள்கிறேன்
கையெடுத்துக் கும்பிட்டு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்

முகநூல்
03.06.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...