Friday, June 10, 2022

சங்கதியே இல்லாத பாடலெனினும்...

 சங்கதியே இல்லாத பாடலெனினும்

உணர்வையும் பாவத்தையும் கொண்டு பாடலை நிரவுவதில்
சுசிலா தாயாருக்கு இணை யாரும் இல்லை
”உயிரா மானமா” வில் கொடியில் இரண்டு மலருண்டு என்ற பாடலை இந்தப் பிரிவில் கொள்ளலாம்
கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும்
இதில் நமக்கு எந்த வழக்கும் இல்லை
ஆனால்
மிக மிக எளிமையான பாடலாகவும் தோன்றும்
பாடிப் பார்த்தால்தான் தெரியும் இதைப் பாடுவது எவ்வளவு சிரமம் என்று
உணர்வையும் பாவத்தையும் அவ்வளவு டஃப்பாகக் கொடுத்திருப்பார்கள் தகப்பனும் தாயும்
இரண்டாவது சரணம்
கண்ணீரிலே தாலாட்டவும்
கல்யாணப் பெண்ணாக சீராட்டவும்
அண்ணன் உண்டோ
தங்கை உண்டோ
அண்ணி என்னும் எங்கள்
அண்ணை உண்டோ
சங்கடமே இல்லாத எளிய வார்த்தைகள்
சிக்கலே இல்லாத சீரான சந்தம்
ஆனால் கண்களை மூடிக்கொண்டு கேட்டால்
தனது குடும்பத்தின் மேன்மையை
உறவின் பின்னலடுக்கை
அதிலும் அண்ணன் எனும்போது அந்த “ண” வை எம் தாயாரைவிட யாரால் அப்படிக் கொடுக்க முடியும்?
அண்ணி என்னும்
எங்கள் அண்ணை உண்டோ
அய்யொ அய்யோ
என்ன ஒரு feel
லயித்துக் கிடப்போம்
சரணத்தின் இறுதியில்
“அம்மா என்னும் தெய்வம் தந்த”
இங்கு “அம்மா என்னும்” என்பதை எல்லா அம்மாக்களுக்குமான காணிக்கையாய் அப்படி குழைத்துக் கொடுப்பார் எம் தகப்பன்
ஊருல எங்க
நாட்டுல எங்க
காட்டுங்க எங்க தாய் போல
என்றும் சொல்லலாம்
ஊருல எங்க
நாட்டுல எங்க
காட்டுங்க எங்க
அப்பனாட்டம் என்றும்
காலரைத் தூக்கலாம்

முகநூல்
09.06.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...