நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காகப் பிரதமர் சென்னை வருகிறார்
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்,
இப்படியான நலத் திட்டங்கள் கோலோகலமாகத் தொடங்கப்படுவதாகவும்
ஆரம்பக்கட்டங்களில் இதற்கான ஒன்றிய அரசின் நிதி முறையாக விடுவிக்கப் படுவதாகவும்
காலம் செல்ல செல்ல,
ஒன்றிய அரசின் நிதி நிறுத்தப்படுவதாகவும்,
எனவே,
அந்தத் திட்டங்களை கொண்டு செல்வதற்கான செலவையும் மாநில அரசே சுமக்க வேண்டியதாக இருப்பதாகவும்
மாநில அரசிற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் ஒன்றிய அரசு தராமல் இழுத்தடிப்பதால்
மாநில அரசுகள் சிரமப்படுவதாகவும் உரையாற்றுகிறார்
இது இயல்பானது
சிரமமாக இருக்கிறது
எனவே,
தொடங்குகிற திட்டங்களுக்கான நிதியையும், வரவேண்டிய ஏனைய நிதியையும் தந்து உதவுங்கள் என்கிற கோரிக்கை இது
இதை முதல்வர் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்
கேட்டிருக்கிறார்
இதற்கு பிரதமர்
தருவதாக,
அல்லது தருவதில் ஒன்றிய அரசிற்கு இருக்கக்கூடிய சிரமங்களை அடுக்கி
நிச்சயம் விரைவில் தருவதாக கூறி இருக்கலாம்
அல்லது முதல்வர் சொல்வது தவறு எனில்
அப்படி நிலுவை எதுவும் இல்லை என்று நிறுவி இருக்கலாம்
அனைத்திற்கும் வாய்ப்பிருந்தது
இதை முதல்வர் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்
திரு அண்ணாமலை கோவப்படவோ பதறவோ இதில் ஏதும் இல்லை
முகநூல்
29.05.2022
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்