Saturday, June 4, 2022

வெளிச்சம் கிடைக்கும்வரை உரையாட வேண்டும்

 வரும் 02.06.2022 அன்று 20 ஆசிரியர் சங்கங்களோடு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்த இருப்பதாக ஒரு தோழர் ட்விட்டரில் சுட்டியிருந்தது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை

இப்படியான உரையாடலுக்காக தொடர்ந்து கத்திக்கொண்டிருப்பவன் என்கிற வகையில் இந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் தொடங்க இருப்பதால் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்வது
ஆசிரியர்களுக்கான பயிற்சி
EMIS பணிப்பளு
போன்றவை பேசுபொருட்கள் என்றும் அறிய முடிகிறது
மே மாதம் 31 ஆம் தேதிவரை பொதுத் தேர்வு
ஜூன் முதல் தேதி முதல் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது
அரசு என்னதான் அவசரம் காட்டினாலும் ஜூன் இருபதாம் தேதிக்குள் தாள் திருத்தும் பணி நிறைவுபெற வாய்ப்பில்லை
ஜூன் 13 அன்று ஒன்று முதல் பத்து வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது
ஜூன் 20 அன்று 12 ஆம் வகுப்பு குழந்தைகளை பள்ளிக்கு வரவைப்பது
ஜூன் 27 அன்று பதினோராம் வகுப்பு குழந்தைகளை பள்ளிக்கு வரவைப்பது என்பதில் சில நடைமுறை சிக்கல் இருந்தாலும் சரியாகத் திட்டமிட்டால் ஓரளவு இதை செய்துவிட முடியும்
நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பதுவரை சிக்கலே இல்லை
உயர்நிலைப்பள்ளிகளில் பெரும்பாலும் பட்டதாரி ஆசிரியர்களே உள்ளனர்
அவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வுத்தாள் திருத்தும் பணியை 11.06.2022 குள் முடித்தால்தான் 13.06.2022 அன்று உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்க முடியும்
01.06.2022 அன்று CE மற்றும் SO மட்டுமே திருத்துவார்கள் என்ற வகையில் 02.06.2022 அன்றுதான் திருத்தும் பணி தொடங்கும் என்று கொள்ள வேண்டும்
02.06.2022 முதல் 12.06.2022 வரையிலான இடைவெளியில் வரும் இரண்டு ஞாயிறுகளைத் தள்ளினால் சரியாக 10 நாட்களே கிடைக்கின்றன
இந்தப் பத்து நாட்களுக்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தாள்களைத் திருத்திவிட முடியுமா?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அவ்வளவு ஆசிரியர்கள் இருக்கிறார்களா?
இல்லை என்றே சொல்லலாம்
எனில்,
எப்படி இதை சமாளிக்கப் போகிறார்கள்?
இரண்டு வாய்ப்புகள் உள்ளன
காலை மற்றும் மாலையில் இருபதில் இருந்து முப்பது என்ற வகையில் அறுபது தாள்களை ஒரு ஆசிரியரை திருத்த வைப்பது என்பது ஒன்று
தேர்வு நடத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பெரும்பாலும் பயன்படுத்தாத நிலையில் திருத்தும் பணியிலும் இதே நிலை தொடரக்கூடும்
எனில்,
அதிகத் தாள்களை திருத்த வைப்பதுதான் கையிலிருக்கும் ஒரே வழி
இது அழுத்தத்தை ஆசிரியர்களுக்கும் இதனால் விளையும் பாதிப்பை பிள்ளைகளுக்கும் கொடுக்கும்
என்ன மாற்று?
தனியார் பள்ளி ஆசிரியர்களையும் பணியில் இறக்க வேண்டும்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் அவ்வளவு கவனமாகத் த்கிருத்த மாட்டார்கள்
அப்படி தவறு நிகழ்ந்தால் அவர்களைக் கேட்க முடிவதில்லை என்று ஒரு கருத்து உண்டு
இதை நான் நிராகரிக்கிறேன்
சரியாகத் திருத்த மாட்டார்கள்,
அப்படி தவறு நிகழும் பட்சத்தில் அவர்களை ஏதும் கேட்க முடியாது என்றால்
அவர்கள் பாடம் நடத்தும்போது தவறு செய்ய மாட்டார்களா?
அப்படி நடக்கும் தவறுகளை கேட்க முடியாதுதானே
எனவே இந்தக் காரணத்தை சொன்னால்
தனியார் ப:ள்ளிகளை மூடிவிட வேண்டும்தானே
ஆகவே தனியார் பள்ளி ஆசிரியர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்
புரிகிறமாதிரி சொல்வதென்றால்
திருச்சியில் உள்ள தனியார் பள்ளிகளில் குறைந்த பட்சம் 500 அறைகள் இருக்கும்
இந்த 500 அறைகளிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்
இந்த 500 வகுப்பறைகளிலும் பாடம் நடத்திய ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் இல்லை என்றால்
அந்தச் சுமை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தோள்களில்தானே விழும்
ஆகவே அனைவரையும் தாள்திருத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்
இந்தக் கூட்டத்தின் பேசுபொருளாக இது இடம்பெற வேண்டும்
போக,
ஆசிரியர் சங்கங்கள் மட்டும் போதாது
மாணவர் பிரதிநிதிகள், பெற்றோர்கள், கல்விமீது அக்கறை கொண்டோர் அனைவரையும் அழைத்து பேச வேண்டும்
மாணவர் ஆசிரியர் உறவை எப்படி சீர்படுத்துவது என்பது குறித்து உரையாட வேண்டும்
மீண்டும் உரையாட வேண்டும்
மீண்டும் மீண்டும் உரையாட வேண்டும்
வெளிச்சம் கிடைக்கும்வரை உரையாட வேண்டும்

முகநூல்
27.05.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...