Thursday, February 25, 2016

பஜ்ஜி அவ்வளவு சூடாயிருக்கிறதாம்.

அப்போது கிருத்திகா கிருஷ்ணகிரியில் இருந்தாள். அவளை பார்த்துவிட்டு  திரும்பிக் கொண்டிருந்தேன். நல்ல அசதி. அப்படியே கண்ணயர்ந்து விட்டேன்.
திடீரென்று ஒரு பையனின் குரல் என்னை எழுப்பியது.
பஜ்ஜி விற்றுக் கொண்டிருந்தான்.
“ சூடான பஜ்ஜி, சுவையான பஜ்ஜி. சூடோ சுவையோ இல்லாமப் போனா பணம் வாபஸ்”
அப்படியே இழுத்துப் போட்டது.
ஒரு சின்னத் தாளால் பஜ்ஜியை விசிறிக் கொண்டே போனான். பஜ்ஜி அவ்வளவு சூடாயிருக்கிறதாம்.
பஜ்ஜி என்ன விலை என்பதல்ல பிரச்சினை. அதை விற்க அவன் கையாளும் யுக்திதான் அலாதியானது.
நல்ல யுக்திகளை விற்பனைக்கு பயன் படுத்துபவனுக்கு நோபல் உண்டென்றால் சத்தியமாய் அவனுக்கு அதற்கான தகுதி உண்டு.
அவனை பாராட்ட வேண்டும் என்று எனக்கு உறைக்கும் முன்னமே பேருந்து புறப்பட்டு விட்டது.
தர்மபுரி பேருந்து நிலையத்தில் பேருந்து பேருந்தாய் ஏறி பஜ்ஜி விற்கும் அவனை யாராவது பார்த்தால் ஒரு லூசு உன்னை பாராட்டி எழுதியிருக்கிறான் என்று சொல்லுங்கள்.

6 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி தோழர்

      Delete
    2. தர்மபுரி போகும் வேலை இருக்கிறது. கட்டாயம் பார்த்துச் சொல்லிவிடுகிறேன்

      Delete
    3. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. வாங்கிப் பார்த்தால் சூடே இருக்காது ,கேட்டால் ,அதற்கும் அவன் பதில் சொல்வான் 'நான் விசிறியது ஈ மொய்த்துவிடக் கூடாது 'என்று :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...