விநோதரனின் நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமையில் விழா இனிதே முடிந்தது. அது குறித்து விரிவாக பிறகு எழுத வேண்டும்.
பிறகு எழுத வேண்டும் என்று விட்டு எழுதாமலே போன நீண்ட பட்டியல் ஒன்று ஏற்கனவே இருக்கிறது.
விழாவை ஒட்டி சந்தித்த நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது சிலர் அரசியலின் தரம் இப்போது மிகவும் தாழ்ந்து போய் விட்டதாகவும், கண்ட கண்ட தகுதியற்றதுகள் எல்லாம் அரசியலில் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பதாகவும் கருத்தோடிருப்பது தெரிந்தது.
அவர்கள் யாரை சொல்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.
யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்பதுதான் நமது அரசியலின் மாண்பே. இதுவும் கூட நீண்ட போராட்டத்திற்கு பின்பே கிடைத்தது. சொத்துவரி ரசீது காட்டினால் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்கிற சட்டம் இருந்த நாடு இது. சொத்துள்ள கனவான்கள் மட்டுமே தேர்தலீல் நிற்க முடியும் என்ற நிலை எளிதில் ஒன்றும் மாறிவிட வில்லை.
அரசு மானியத்தை ஊதியமாக பெற்று பாடம் நடத்தும் ஆசிரியனான நான் அரசியல் செய்யலாமெனில் நடிகை ஒருவர் அரசியல் செய்வதில் என்ன தவறிருக்கிறது.
அவரது அரசியலை விமர்சிப்போம். அது விடுத்து அவரது தொழிலை விமர்சிப்பது கேவலத்தின் உச்சம்.
- பாடம் நடத்துவது, பேருந்து ஓட்டுவது, மருத்துவம் பார்ப்பது நம் தொழில் எனில் நடிப்பது அவர் தொழில்.
தாங்கள் கூறியபடி அவரது அரசியலை விமர்சிக்கலாம். அதனை விடுத்து அவரது தொழிலை விமர்சிப்பது கேவலத்தின் உச்சமே.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete