மேலே காணும் படத்தைக் காட்டி இது என்னவென்று கேட்டால் பெரும்பான்மையோர் இது ஏதோ ஒருவாய்க்கால் என்றோ அல்லது சின்ன நதி என்றோ சொல்லக் கூடும். ஆனால் இது காவிரி. சத்தியமாய் இது காவிரிதான்.
நம் தமிழ் மண்ணில் ”ஆடு தாண்டும் காவிரி” என்று சொல்வோமே. அந்த ஆடு தாண்டும் காவிரிதான் கன்னடத்தில் மேகே தாட்டு. மேகே என்றால் கன்னடத்தில் ஆடு என்றும் தாட்டு என்றால் தாண்டு என்றும் பொருள்.
இங்குதான் ஒரு அணை கட்டுவதாக இருக்கிறது கர்நாடக அரசு. இதை எதிர்த்துதான் தமிழக விவசாயிகளும் மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏதோ தமிழர்கள் அணைகளுக்கு எதிரானவர்கள் என்றோ அல்லது அணைகளை கட்டி கர்நாடாகா வளம் பெற்றுவிடப் போகிறார்களே என்ற பொறாமையினாலோ தமிழ் மக்கள் இந்தப் போராட்டத்தை கையெடுக்க வில்லை.
காவிரி தமிழ் மண்ணுக்கும் சொந்தமானது. ஏற்கனவே தமிழ் மண்ணுக்கு உரிய உரிமையை வழங்க மறுத்து கர்நாடகம் தகறாறு செய்து வருகிறது. எந்தக் கட்சி அங்கு ஆட்சிக்கு வந்தபோதும் இந்த நிலை அங்கு மாறுவதே இல்லை. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதற்கு முன்னால் இருந்த ஆட்சி செயல்படுத்திய திட்டங்களை செயல் படுத்த தயக்கம் காட்டும். பி.ஜே.பி யும் அப்படித்தான்.
ஆனால் இரண்டு கட்சிகள் மட்டுமல்ல மதச் சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மண்ணுக்கு உரிய உரிமை நீரை வழங்குவதில்லை என்பதில் ஒற்றுமையோடு நிற்கின்றன.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே இன்னுமொரு அணையைக் கட்டுவதென்ற கர்நாடகத்தின் முடிவென்பது இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும்.
இது தடுக்கப்படா விட்டால் பையப் பைய இன்னும் ஒரு ஐம்பது அறுபது ஆண்டுக் காலத்தில் தமிழ்மண்ணின் ஒரு பகுதி பாலையாய்ப் போகும் அபாயம் இருக்கிறது.
இந்தப் போரட்டத்தை தமிழ் மண்ணிற்கெதிரான போராட்டம் என்று மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
இரண்டு மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பிரச்சினையில் கருத்து முரண்பாடோ தகறாறோ இருக்குமானால் மத்திய அரசு இருவரையும் அமர வைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பேச்சு வார்த்தை தோல்வியுற்றால் மீண்டும் அதைச் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் தோற்றால் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு இருவரையும் வலியுறுத்த வேண்டும். வழக்கு முடியும் வரை இருக்கும் நிலையிலேயே இருக்குமாறும் சற்றும் யாரும் முன்நகர்ந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். வழக்கு முடிந்துவிட்டால் நீதிமன்றம் சொல்வதை பாரபட்சமின்றி கறாராக செயல்படுத்துவதை கண்கானிக்க வேண்டும்.
தனது இந்தக் கடமையை செய்ய மறுக்கிறது மத்திய அரசு என்பதால்தான் அதை எதிர்க்கிறோம்.
விவசாயிகள் அழைப்பு விடுத்திருக்கும் இந்தப் போராட்டம் வெல்லட்டும் என்று வாழ்த்துகிறேன்.
நல்ல கருத்து
ReplyDeleteசிறு திருத்தம்
மேகே என்றால் கன்னடத்தில் ஆடு என்றும் தாட்டு என்றும் பொருள்.
மேகே என்றால் கன்னடத்தில் ஆடு என்றும் ,
தாட்டு என்றால் தான்டுதல் என்றும்
வணக்கம்.
Deleteசரி செய்து விட்டேன்.
மிக்க நன்றி செந்தில்
பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக நடந்துகொண்டால் சிக்கல்கள் வருவதில்லை. அனைத்தையும் அரசியலாக நோக்கும்போது பிரச்சினை வருகிறது. நல்ல முடிவினை எதிர்நோக்குவோம்.
ReplyDeleteபொறுப்பில் உள்ளவர்களின் சுயநலம்தான் பிரச்சினையே. மிக்க நன்றி தோழர்
Deleteபோராட்டம் வெல்லட்டும் தோழர்
ReplyDeleteதம 3
மிக்க நன்றி தோழர்
Deleteவிவசாயிகளின் இந்தப் போராட்டத்தால் கநாடகாவிலிருந்து தமிழகத்துக்குச் செல்லும் சுமார் நூறு பேரூந்துகள் நிறுதப் பட்டன. ஒரு பகல் பொழுது பெங்களூருவில் தமிழ் தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டன. அரசுகளின் போக்கு மக்களைப்பாதிக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete