கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவானூர் இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த அரவிந்தன் என்ற குறவர் இனத்தை சார்ந்த இளைஞன் பெங்கலூரில் வெல்டராக பணியாற்றுகிறார். அவரது ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் திருவிழா வரவே அதைக் காண அங்கு வருகிறார்.
திருவிழாவில் நடந்த தெருக் கூத்தைப் பார்க்கச் சென்றிருக்கிறார். தாழ்த்தப் பட்ட ஒருவர் தங்களுக்கு சமமாக நின்று தெருக்கூத்தைப் பார்ப்பது ஆதிக்க சாதி இளைஞர்கள் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. அவரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். மயங்கி விழும் நிலையிலிருந்த அரவிந்தன் குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார். குற சாதிப் பய திருவிழாவிற்கு வருவதுமில்லாமல் தண்ணீர் வேற கேட்பீங்களோ என்றவாறு அவரது வாயில் சிறுநீரைக் கழித்திருக்கிறார்கள்.
தீக்கதிரில் இந்தச் செய்தியை வாசித்ததும் தாங்க முடியாமல் நண்பர்களிடம் அரற்றத் தொடங்கினேன்.
“எப்ப பார்த்தாலும் பீயத் திங்க வைச்சான், மூத்தரத்தக் குடிக்க வச்சான்னே பேசிக்கிட்டு. கேட்கவே அறுவெறுப்பாக இருக்கு” என்றார்கள்.
கேக்கவே அறுவெறுப்பா இருக்கே. அத அனுபவவிச்சவங்களுக்கு எப்படி இருக்கும் என்றவுடன் அத நீ பேசி என்னவாகப் போகுது என்கிறார்கள்.
என்ன ஆகும் என்று மட்டுமல்ல என்ன செய்வது என்றும் சட்டென புரியவில்லைதான். ஆனால் ஆகவே ஆகும். அதற்காக நானும் எதையேனும் செய்யவே செய்வேன்.
அதுவரைக்கும் இதை பேசவே பேசுவேன் , கூடுதல் குரலெடுத்து ஒவ்வொரு முறையும்.
//“எப்ப பார்த்தாலும் பீயத் திங்க வைச்சான், மூத்தரத்தக் குடிக்க வச்சான்னே பேசிக்கிட்டு. கேட்கவே அறுவெறுப்பாக இருக்கு” என்றார்கள்.//
ReplyDeleteஇந்த ஜந்துக்களைல்லாம் எப்படிதான் நண்பர்கள் என்று சொல்கிறீர்களோ?
அவர்களோடுதான் நமக்கு நிறைய வேலை இருக்கு. கொஞ்சம் பெயரோடு வாங்களேன் தோழர்
Delete