எழுபதுகளில் ஒருமுறை நடந்த ஆசிரியர் போராட்டத்தை அன்றைய அரசு கண்டுகொள்ளவே இல்லை என்றும் இறுதியாக ஆசிரியர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயக் கூழித் தொழிலாளர்களும் ஒருநாள் போராட்டத்தில் இறங்கியதாகவும், அடுத்த நாளே பேச்சு வார்த்தைக்கு அரசு ஆசிரியர்களை அழைத்ததாகவும் கேள்வி பட்டிருக்கிறேன்.
போராடிய எல்லா நாட்களுக்குமான ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்டு விட்டது. ஆனால் விவசாயிகளுக்கான அந்த ஒரு நாள் இழப்பு இன்றுவரை ஈடு செய்யப்படாமலேயே இருக்கிறது என்பதையெல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லக் கேள்வி பட்டிருக்கிறேன்.
அந்த நன்றிக் கடனுக்காக அல்ல இன்றைய விவசாயிகள் போராட்டத்தை நான் ஆதரிப்பது. எது செய்தும் அவர்களது அந்த ஒருநாள் இழப்பை, தியாகத்தை எங்களால் ஈடு செய்துவிட முடியாது என்பதை நான் அறிவேன்.
விவசாயிகளின் நேற்றைய போராட்டம் என்பது எனக்குமானது என்பதால் நேற்று மாலை ஆறு மணி வரைக்கும் வீடுதான்.
(28.03.2015 அன்று தமிழக விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்த மேகே தாட்டில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்த போராட்டத்திற்கு ஆதரவாக)
(28.03.2015 அன்று தமிழக விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்த மேகே தாட்டில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்த போராட்டத்திற்கு ஆதரவாக)
தங்களது உணர்வு போற்றுதலுக்கு உரியது தோழர்
ReplyDeleteதம 2
மிக்க நன்றி தோழர்
Delete