Monday, July 14, 2014

நிலைத் தகவல் 54


சபையில் ஏறத்தாழ பெரும்பான்மைக்கு அதிகமானோர் தொழிலாளிகளைப் பற்றி அக்கறைப் படாதவர்கள். முதலாளிகளின் கூட்டாளிகள். இதை உணர்ந்துகொண்ட ராஜஸ்தான் அரசு காற்று உள்ளபோதே சாதித்துக் கொள்ளவேண்டும் என்று இறங்கியுள்ளது என்பதை ஜூன் 16 தி இந்து அம்பலப் படுத்தியுள்ளது.

தொழிலாளிகளுக்கு எதிரான மூன்று சட்டத் திருக்கங்களைக் கோரி கையேந்தி இருக்கிறது அது.

1. 100 தொழிலாளிகள் வேலை பார்த்தாலே போதும், அந்த நிறுவனம் தொழில் தகறாறு சட்டத்தின் கீழ் வந்துவிடும். ராஜஸ்தான் அரசு அதை திருத்தி 300 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனக்கள் மட்டுமே தொழில் தகறாறு சட்டத்தின்கீழ் கொண்டுவரப் படவேண்டும் என்று கோருகிறது.

இது தொழிலாளிகளுக்கு எதிரானதும் முதலாளிகளுக்கு ஆதரவானதும் ஆகும்.

2. 20 ஒப்பந்தத் தொழிலாளர் பணி புரிந்தாலே அந்த நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.இந்த வரம்பை 50 தொழிலாளர்கள் என்ற அளவிற்கு நகர்த்த வேண்டும் என்கிறது.

3. 10 தொழிலாளி வேலை பார்த்தாலே அந்த நிறுவனம் ஆலைத் தொழிலாளர் சட்டத்தின்கீழ் வந்து விடும். இதையும் 20 என்று நகர்த்தக் கோறுகிறது.

இது மூன்றும் நிறைவேறிவிட்டால் தொழிலாளிக்கு இப்போதிருக்கும் குறைந்த அளவிலான பாதுகாப்பும் இல்லாமல் போகும்.

இதை பி.ஜே.பி, காங்கிரஸ், இன்னபிற வலதுசாரி கட்சிகள் ஆதரிக்கவே செய்யும்.

பலமற்றுப் போன இந்தச் சூழலில் சபையில் இடதுசாரிகளின் பணி மிகக் கடுமையாகத்தான் இருக்கும்.

சபைக்கு வெளியே மக்களுக்கான வேலை அதிகம் என்பதை உணரவேண்டும்.

தொழிலாளிகள் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற உண்மையை உணர்ந்தாலே போதும் நாம் களத்திற்கு வந்துவிடுவோம்.

2 comments:

  1. இந்த மூன்று சட்டத திருத்தங்கள் அங்கே நிறைவேற்றப் பட்டால் ,இந்த விஷக் காய்ச்சல் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் வாய்ப்பு இருக்கிறது !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. அந்த திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்போது அது தேசம் முழுமைக்கும்தான் அமல்படுத்தப்படும் தோழர் . மிக மிக ஆபத்தானது

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...