லேபில்

Wednesday, July 23, 2014

48


சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்

திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்

புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்

அநேகமாக
நாளை

தப்பினால்
நாளை மறு நாள்

தொடங்கி விட்டது
பிரிவினை கூட

நல்லதுதான்
இருக்கும் போதே
பிரித்துக் கொள்வது

பார்த்து பார்த்து
சேர்த்தது

அடித்துக் கொள்ளாமல்

அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க

சீந்துவாரற்று
அநாதைகளாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்.

5 comments:

  1. உண்மை தோழர்
    நம்மிடம் இருக்கும் புத்தகங்களின் எதிர்கால நிலைமையை
    நினைத்துப் பார்த்தால் கவலையாகத்தான் இருக்கிறது
    தம 2

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  3. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023