1
2004 இல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தான் பணியாற்றியபோது உளவுத்துறை மோசமானவர் என்று சான்றளித்த நீதிபதி மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பதவி நீட்டிப்பு தரப்பட்டதாக ஓய்வுபெற்ற பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கட்ஜு கூறியுள்ளார் .
இதை தமிழகத்தின் கட்சி ஒன்றின் நிர்ப்பந்தத்தின் பொருட்டு அன்றைய மத்திய அரசு செய்ததாகவும் இதில் மூன்று நீதிபதிகளின் பங்கும் உண்டென்றும் அவர். கூறியுள்ளார் .
இதை அப்போதே சொல்லாமல் இப்போது சொல்வது ஏன் என்பதோடு அது உண்மைதானா என்பதை கண்டடைவதும் உண்மை எனும் பட்சத்தில் தாமதம்தான் ஆனாலும் இப்போதேனும் நடவடிக்கை எடுப்பதும் அவசியம்
2
நீதிபதி கட்ஜு அவர்களை “ முரண்பாடுகளின் மொத்த உருவம்” என்று கலைஞர் அவர்கள் சொல்லியுள்ளார்கள். நீதி மன்ற நடவடிக்கைகளில் தலையிடாதவர் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் என்று இப்போது கூறும் கட்ஜு அவர்கள் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று சொன்னவர்தானே என்றும் அவர் கட்ஜு அவர்களின் முரண்பாடுகளை நிறுவுகிறார்.கட்ஜுவின் இந்த கூற்று அரசியல் உள் நோக்கம் கொண்டது என்றும் சொல்கிறார்.
நாம் கலைஞர் அவர்கள் சொல்வதை புறந்தள்ளவும் விரும்பவில்லை. மாறாக கலைஞர் இந்த அறிக்கையில் கட்ஜு அவர்கள் சொன்னது பொய் என்று நிறுவவில்லை.
நியாயமான விசாரனை அவசியம் என்றும், அபாண்டமாக கட்ஜு அவர்கள் பொய் சொல்லியிருப்பின் அவரும் அவர் கூற்று உண்மையெனில் உரியவர்களும் தண்டிக்கப் படவேண்டும்
ஜூன் 2001இல் கைது செய்யப்பட்டகலைஞர் நீதிபதி அசோக் குமார் முன் கொண்டு சென்றபோது அவர் கலைஞரை ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டதாகவும் மேலும் கலைஞர் ஜாமீன் கோரவில்லையாதலால் அவரை நீதிபதி ஜாமீனில் விடுவித்தார் என்பது பொய் என்றும் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் எழுதியிருக்கிறார். இதற்கு நீதிபதி கட்ஜு என்ன சொல்லப்போகிறார்?
ReplyDelete