லேபில்

Friday, July 11, 2014

நிலைத் தகவல் 53

அந்த நிறுத்தத்தில் நகரப்பேருந்துகளைத் தவிர புறநகர் பேருந்தெதுவும் நிற்காது . மிகவும் வயதான பெரியவர் ஒருவர் கைநீட்டவே மனிதாபிமானத்தோடு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.

"எங்கங்கய்யா?" என்ற நடத்துனரிடம் "இருங்கலூர் கைகாட்டி" என்றார்.

சென்னையிலிருந்து மதுரை போகும் வண்டி அது.

சென்னையிலிருந்து மதுரை போற வண்டி கைகாட்டியெல்லாம் நிற்க முடியுமா? என்று கேட்ட நடத்துனரிடம் அகரத்துல பஸ் நிக்கும்னா இருங்கலூர் கைகாட்டியிலும் நிக்கனும். அகரத்தவிட எங்க ஊர் எதுல கொறஞ்சு போச்சு? என்றதும் நடத்துனரும் ஓட்டுனரும் சிரித்து விட்டனர்.

இருங்கலூர் கைகாட்டியில் பேருந்து நின்றது

3 comments:

  1. அருமை! கேட்டால் கிடைக்கும்! நன்றி!

    ReplyDelete
  2. மனிதாபிமானமுன்ன ஓட்டுநரும் நடத்துனரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் தோழர்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர் . மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023