லேபில்கள்

Thursday, July 3, 2014

நிலைத் தகவல் 48

அவர்களும் நம்மைப் போலவே ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள்தான்.

மகனாகவோ, மகளாகவோ வீட்டிற்குள் வளைய வளைய வந்தவர்கள்தான்.

ஏதோ ஒரு புள்ளியில் தாம் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்பதை கண்டறிந்த நொடியில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். 

வளர்த்த நாய்க்குட்டி காணாமல் போனாலே பதறிப் போய் தெரு தெருவாய் தேடுபவர்கள் காணாமல் போன தாங்கள் பெத்து வளர்த்த இவர்களைத் தேடுவதே இல்லை.

வீட்டை விட்டு வெளியேறும் அந்தக் கணத்தில் வாக்குரிமை உள்ளிட்ட சகல உரிமைகளும் இவர்களுக்கு இல்லாமல் போகிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சாசாதகமான ஒரு தீர்ப்பின் உதவியோடு ஏழாண்டு கால போராட்டத்தின் விளைவாக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கிறார் அக்கய் பத்மஷாலி.

இந்த வகையில் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெருகிறார்.

வாழ்த்துக்கள் அக்கய்.

எனக்கு ஒரு தம்பி ஒரு திருநங்கை என்று எந்த வித நெருடலுமின்றி சொல்லும் காலம் என் மரணத்திற்குமுன் வந்தால் மகிழ்வோடு சாவேன்

8 comments:

 1. நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி எழில்

   Delete
 2. அக்கய் பத்மஷாலிக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர்

   Delete
 3. அக்கய் பத்மஷாலி பாராட்டிற்கு உரியவர்
  பகிர்வுக்கு நன்றி தோழர்

  ReplyDelete
 4. அருமை தோழர். அக்கய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு வடக்கயிற்றின் முனையாக நிற்கிறார். வருவார்கள் நிச்சயம் நீண்ட தடமேற்றி.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் வருவார்கள் ஹரணி . மிக்க நன்றி

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels