Monday, April 20, 2020

ஆனந்த் டெல்டும்ப்டே கைது செய்யப் பட்டிருக்கிறார்

நேற்று மாண்பமை பிரதமர் மக்களிடத்திலே உரையாற்றி இருக்கிறார்
தனது உரையினிடையே தந்தை அம்பேத்கரை அவர் நினைவு கூர்ந்ததாகவும் கூறுகிறார்கள்
மகிழ்ச்சி
ஆனால்
அதே நாளில் தந்தை அம்பேத்கரின் கொள்ளுப் பேரன் முறை கொண்ட பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே கைது செய்யப் பட்டிருக்கிறார்
அதே நாளில் என்று நான் அழுத்திச் சொல்வதற்கு ஒரு காரணம்,
நேற்று தந்தை அம்பேத்கரின் பிறந்தநாள்
நேற்று தோழர் கவுதம் நவ்லக்காவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்
இவர்களது கைதினை கண்டிக்கிறோம்
அதற்கு எதிர்வினையாக
பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டேயின் “மஹத்” தினை நேற்றிலி இருந்து மறு வாசிப்பு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்
நேற்று தோழர் அ.மார்க்ஸ் அவர்களின் பதிவின் மூலமாகத்தான் கவுதம் நவ்லக்கா அவர்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது
இந்தக் கைதிற்கான இன்னொரு எதிர்வினையாக கவுதம் நவ்லக்கா குறித்தும் தேடிப் படிக்க முடிவெடுத்திருக்கிறேன்

15.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...